Advertisement


ஷேன் வாட்சன் உற்சாகம்

பிப்ரவரி 12, 2018.
 Comments  
 


Shane Watson, Australia Cricketer, IPL Cricket, Chennai
 

சென்னை: ‘‘ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்காக விளையாட இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது,’’ என, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் வாட்சன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஆஸ்திரேலிய ‘ஆல்–ரவுண்டர்’ ஷேன் வாட்சன், 36. இதுவரை 59 டெஸ்ட், 190 ஒருநாள் மற்றும் 58 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் விளையாடிய இவர், கடந்த 2016ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின், ‘பிக் பாஷ் லீக்’, ஐ.பி.எல்., போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார்.

ஐ.பி.எல்., தொடரில், கடந்த 2008 முதல் 2015 வரை ராஜஸ்தான் அணிக்காக (78 போட்டி, 2372 ரன்கள், 61 விக்கெட்) விளையாடினார். கடந்த இரண்டு சீசனில் பெங்களூரு அணிக்காக (24 போட்டி, 250 ரன், 25 விக்கெட்) விளையாடினார். சமீபத்தில் நடந்த 11வது சீசனுக்கான ஐ.பி.எல்., வீரர்கள் ஏலத்தில் இவர், சென்னை அணியில் தேர்வானார்.

இதுகுறித்து வாட்சன் கூறியது: ஐ.பி.எல்., தொடரில் இம்முறை சென்னை அணிக்காக விளையாட இருப்பதை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். தவிர, உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனியின் தலைமையின் கீழ் விளையாட இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அணியில் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா உள்ளிட்ட சிறந்த வீரர்கள் இடம் பெற்றிருப்பது கூடுதல் பலம். இவர்களுடன் இணைந்து விளையாட இருப்பதை நினைத்துப் பார்க்கையில், உற்சாகமாக உள்ளது.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். என்னால் முடிந்த வரை விளையாடுவேன்.

இவ்வாறு வாட்சன் கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?