Advertisement


‘குலுங்கியது’ கொரியா: குளிர்கால ஒலிம்பிக்கில் அதிர்ச்சி

பிப்ரவரி 11, 2018.
 Comments  
 


winter olympic
 

பியாங்சங்க்: குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கும் 100 கி.மீ., துாரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தவிர, பனிக்காற்றின் வேகமும் அதிகமாக இருப்பது வீரர், வீராங்கனைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென் கொரியாவில் உள்ள பியாங்சங்க் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இந்நிலையில், நேற்று இந்திய நேரப்படி அதிகாலை, பியாங்சங்க் நகருக்கு 100 கி.மீ., துாரத்தில் போகங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.8 அளவில் உருவானதால், பாதிப்பு ஏதும் இல்லை. இதற்கிடையே, காற்றின் வேகம் 45 கி.மீ., எட்டி உள்ளது. நேற்று நடக்கவிருந்த ஆண்களுக்கான பனிச்சறுக்கு போட்டி ரத்து செய்யப்பட்டது. இப்போட்டிகள் வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. தவிர, வெப்பநிலை மைனஸ் 14 டிகிரி செல்சியஸ் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அச்சம் வேண்டாம்

ஒலிம்பிக் போட்டி அமைப்பாளரின் செய்தித்தொடர்பாளர் பெய்க் யூ கூறுகையில்,‘‘ போட்டி நடக்கும் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள கட்டடம், ரிக்டர் அளவில் 7 வரையிலான நிலநடுக்கத்தை தாக்குப்பிடிக்கும். யாரும் அச்சப்பட வேண்டாம். இதைப்போல, பனியின் அளவுக்கு அதிகமாகிக்கொண்டே வருகிறது. விளையாட்டு நட்சத்திரங்கள் தொப்பி மற்றும் ‘கிளவுஸ்’ அணிந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்,’’ என்றார்.

விடைபெற்றார் கேசவன்

ஆண்களுக்கான ‘லுாஜ்’, ஒற்றையர் ஓட்டத்தில் இந்தியாவின் சிவ கேசவன் பங்கேற்றார். 1344 மீ., துாரம் கொண்ட இதன் மூன்றாவது சுற்றில் அதிகபட்சமாக 127.8 கி.மீ., வேகத்தில் வந்தார். 48.900 வினாடியில் கடந்த கேசவன், 30வது இடம் பிடித்தார். பதக்க வாய்ப்பை உறுதி செய்யும் சுற்றுக்கு முன்னேறுவதற்கு, முதல் மூன்று சுற்று முடிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், கேசவனுக்கு 34வது இடமே கிடைத்தது. ‘டாப்–20’ வீரர்கள் மட்டும் அடுத்த சுற்றுக்குள் நுழைய, இவர் போட்டியிலிருந்து வெளியேறினார்.

கேசவன், 36,கடந்த 1998ல் தனது 16வது வயதில் ஜப்பானின் நகானோவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில்முதல் முறையாக பங்கேற்றார். 

அடுத்து நடந்த அத்தனை ஒலிம்பிக்கிலும் கலந்து கொண்டார்.இவரது 6வது மற்றும் கடைசி ஒலிம்பிக் போட்டியாக பியாங்சங்க் அமைந்தது. இத்துடன், சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறுவேன் என ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஒலிம்பிக்கில் பதக்க வாய்ப்பு கைகூடாத காரணத்தால், வருத்தத்துடன் ஓய்வு பெற்றார்.

காதலில் சறுக்கினர்

விளையாட்டில் பல நாடுகளை சேர்ந்த நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு இடையே சில தருணங்களில் காதலும் ஏற்படுகிறது. அமெரிக்க ஸ்கேட்டிங் நட்சத்திரங்கள் கிறிஸ், அலெக்சா நைரிம். கடந்த 2012 முதல் ஒரே பயிற்சியாளரிடம் இருவரும் பயிற்சி பெற்றனர். 2014ம் ஆண்டு காதலில் இணைந்த இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். தற்போதைய, குளிர்கால ஒலிம்பிக்கில் ஜோடியாக பங்கேற்கின்றனர்.

இது குறித்து கிறிஸ் கூறுகையில்,‘‘ ரசிகர்களுக்கு எங்களின் காதல் வித்தியாசமாக இருக்கும். எங்களைப்பொறுத்தவரை இதை ‘பாசிட்டிவாக’ பார்க்கிறோம். போட்டியின்போது, எப்படி செயல்படுவது மற்றும் உணர்வுப்பூர்வமாக தகவலை பரிமாறுவது போன்றவற்றை தெரிந்து வைத்துள்ளோம்,’’ என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?