Advertisement


விஜய் ஹசாரே: தமிழகம் ஏமாற்றம்

பிப்ரவரி 11, 2018.
 Comments  
 


Baba Aparajith
 

சென்னை: விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டியில் ஏமாற்றிய தமிழக அணி, 29 ரன் வித்தியாசத்தில் ஆந்திராவிடம் தோல்வியடைந்தது.

சென்னையில் நடக்கும் விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடருக்கான ‘சி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஆந்திரா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தமிழக அணி கேப்டன் பாபா அபராஜித், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். முதலில் ‘பேட்டிங்’ செய்த ஆந்திர அணிக்கு அஷ்வின் ஹெபார் (38) நல்ல துவக்கம் தந்தார். அபாரமாக ஆடிய ஸ்ரீகர் பாரத் (82), ரிக்கி புய் (52), சுமந்த் (62*) கைகொடுத்தனர். ஆந்திர அணி, 50 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 276 ரன்கள் எடுத்தது. தமிழக அணி சார்பில் ராஹில் ஷா, 2 விக்கெட் வீழ்த்தினார்.

ஜெகதீசன் நம்பிக்கை

சவாலான இலக்கை விரட்டிய தமிழக அணிக்கு கங்கா ஸ்ரீதர் ராஜு (18) சுமாரான துவக்கம் தந்தார். கவுசிக் காந்தி (44), ஜெகதீசன் (40), கேப்டன் அபராஜித் (30), அனிருத் (38), ஜெகதீசன் கவுசிக் (56) நம்பிக்கை அளித்தனர். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் (4), அபினவ் (3), அஸ்வின் கிறிஸ்ட் (2), விக்னேஷ் (2) சொற்ப ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினர்.

தமிழக அணி, 48.5 ஓவரில், 247 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. ராஹில் ஷா (2) அவுட்டாகாமல் இருந்தார். இதுவரை விளையாடிய 5 போட்டியில், ஒரு வெற்றி, 4 தோல்வியை பெற்ற தமிழக அணி, 4 புள்ளிகளுடன் காலிறுதி வாய்ப்பை இழந்தது. சென்னையில், வரும் 14ல் நடக்கவுள்ள கடைசி போட்டியில் தமிழகம், ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

‘சிக்சர்’ சுப்மன்

பெங்களூருவில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் பஞ்சாப், கர்நாடகா அணிகள் மோதின. இதில், சுப்மன் கில், பஞ்சாப் சார்பில் விளையாடினார். இவர், 122 பந்தில் 123 ரன்* (8 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினார். தவிர, ஒரே ஓவரில் தொடர்ந்து ஆறு சிக்சர் பறக்கவிட்டார். இதன் மூலம், பஞ்சாப் சார்பில் ‘லிஸ்ட் ஏ’ போட்டியில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த மூன்றாவது வீரரானார். இதற்கு முன், ஹர்பஜன் (எதிர்– குஜராத், 2014), யுவராஜ் (எதிர்– மும்பை, 2015) இந்த சாதனையை எட்டி இருந்தனர். பஞ்சாப் அணி 42 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது. பின், களமிறங்கிய கர்நாடகா அணி 42 ஓவரில் 265/8 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி, 4 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?