Advertisement


இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்

பிப்ரவரி 10, 2018.
 Comments  
 


India, South AFrica, Women One Day Cricket
 

போட்செப்ஸ்டிரூம்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

‘டாப்–8’ அணிகள் பங்கேற்கும், பெண்களுக்கான ஐ.சி.சி., சாம்பியன்ஷிப் தொடர், உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. இதில் ‘டாப்–4’ இடங்களை பிடிக்கும் அணிகள், வரும் 2021ல் நடக்கவுள்ள உலக கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறும். இதன் ஒரு பகுதியாக தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி, 2–0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது.

மூன்றாவது போட்டி போட்செப்ஸ்டிரூம் நகரில் நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ செய்த இந்திய அணிக்கு மந்தனா (0), கேப்டன் மிதாலி ராஜ் (4) ஏமாற்றினர். ஹர்மன்பிரீத் கவுர் (25), ஆறுதல் தந்தார். தீப்தி சர்மா (79), வேதா கிருஷ்ணமூர்த்தி (56) கைகொடுத்தனர். இந்திய அணி, 50 ஓவரில், 240 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு லாரா வால்வார்ட் (59) நல்ல துவக்கம் தந்தார். அபாரமாக ஆடிய மிக்னன் டி பிரீஸ் (90*), கேப்டன் டேன் வான் நிகெர்க் (41*) கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி, 49.2 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இருப்பினும் இந்திய அணி, 2–1 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. இனி, இவ்விரு அணிகள் 5 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் மோதவுள்ளன.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?