Advertisement


தமிழகம் மீண்டும் ஏமாற்றம்

பிப்ரவரி 09, 2018.
 Comments  
 


ashwin
 

சென்னை: விஜய் ஹசாரே டிராபி தொடரில் தமிழக அணி ‘ஹாட்ரிக்’ தோல்வி அடைந்தது. ம.பி., அணிக்கு எதிரான லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

இந்தியாவில், விஜய் ஹசாரே (50 ஓவர்) உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ள‘நடப்பு சாம்பியன்’தமிழக அணி தனது 4வது லீக் போட்டியில் மத்திய பிரதேசத்தை எதிர் கொண்டது. ‘டாஸ்’ வென்ற ம.பி., அணி ‘பவுலிங்’ தேர்வு செய்தது.

ஜெகதீசன் ஆறுதல்

தமிழக அணிக்கு கங்கா ஸ்ரீதர் (0), கவுசிக் காந்தி (7) ஜோடி அதிர்ச்சி தந்தது. ஜெகதீசன், பாபா அபராஜித் சிறப்பாக செயல்பட்டனர். அபராஜித் 43 ரன்கள் எடுத்தார். பின் வந்த, கேப்டன் விஜய் சங்கர், ஜெகதீசனுடன் இணைந்தார். இருவரும் அரை சதம் அடித்தனர். ஜெகதீசன் (99) சத வாய்ப்பை இழந்தார். விஜய் சங்கர் 84 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் (5), அஷ்வின் (4) ஏமாற்றினர். முடிவில், தமிழக அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்தது.

ரஜத் சதம்

கடின இலக்கை துரத்திய ம.பி., அணிக்கு நமன் ஓஜா (39) ஓரளவு கைகொடுத்தார். ரஜத் (158) சதம் விளாசினார். ரமீஸ் கான் அரை சதம் அடித்தார். முடிவில், ம.பி., அணி 46 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 303 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. ரமீஸ் (78), கேப்டன் ஹர்பிரீத் சிங் (12) அவுட்டாகாமல் இருந்தனர். இத்தொடரில் தமிழக அணி ‘ஹாட்ரிக்’ தோல்வியை பதிவு செய்தது. ஏற்கனவே, கடந்த இரண்டு லீக் போட்டியில் (எதிர்– கோவா, மும்பை) வீழ்ந்திருந்தது.

 

 

 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?