Advertisement


ஆசிய பாட்மின்டன்: காலிறுதியில் இந்தியா

பிப்ரவரி 08, 2018.
 Comments  
 


Asian Team Badminton Championships, India, Sindhu
 

அலோர் சிடார்: ஜப்பானுக்கு எதிரான ஆசிய பாட்மின்டன் லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வியடைந்தது. இருப்பினும், இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது.

மலேசியாவில் உள்ள அலோர் சிடார் பகுதியில்,அணிகளுக்கு இடையிலான ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் பெண்களுக்கான ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, முதல் போட்டியில் ஹாங்காங்கை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் ஜப்பான் அணியுடன் மோதியது.

சிந்து வெற்றி: முதல் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின் அகானேவை சந்தித்தார். முதல் செட்டை 21–19 என கைப்பற்றிய சிந்து, அடுத்த செட்டையும் 21–15 என வசப்படுத்தினார். முடிவில், சிந்து 21–19, 21–15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் பின் நடந்த இரண்டாவது ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணபிரியா 12–21, 12–21 என சயாகாவிடம் வீழ்ந்தார்.

அஷ்வினி ஏமாற்றம்: ஒற்றையர் பிரிவில் கடைசி போட்டியில் நட்சத்திர வீராங்கனை அஷ்வினி பொன்னப்பா 14–21, 12–21 என எதிரணியின் ஒகோரியிடம் தோல்வியடைந்தார்.

இரட்டையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் சன்யோகிடா, பிரஜ்கதா ஜோடி 17–21, 17–21 என ஷிகோ, கோஹரு ஜோடியிடம் வெற்றியை பறிகொடுத்தது. கடைசி போட்டியில் இணைந்த அஷ்வினி, சிக்கி ரெட்டி ஜோடியும் 18–21, 18–21 என ஜப்பானின் மிசாகி, அயாகா ஜோடியிடம் வீழ்ந்தது.

முடிவில், இந்திய அணி 1–4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இருப்பினும், ‘ஏ’ பிரிவில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என ஒரு புள்ளி பெற்ற இந்திய அணி இரண்டாம் இடம் பிடித்து காலிறுதிக்குள் நுழைந்தது.

சாய் பிரனீத் ஆறுதல்

ஆண்களுக்கான ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, முதலிரண்டு போட்டிகளில் பிலிப்பைன்ஸ், மாலத்தீவு அணிகளை வீழ்த்தியது. மூன்றாவது போட்டியில் இந்தியா, இந்தோனேஷியா அணிகள் மோதின.  ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரனீத் மட்டும் வெற்றி பெற்றார். மற்ற இந்திய வீரர்களான ஸ்ரீகாந்த், சுமீத் ரெட்டி தோல்வியடைந்தனர். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக்சாய்ராஜ், சிராக் செட்டி ஜோடி வெற்றி பெற்றது. மற்றொரு இந்திய ஜோடியான அர்ஜுன், ராம்சந்திரன் ஜோடி தோல்வியடைந்தது.

முடிவில் இந்திய அணி, 2–3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இருப்பினும் மூன்று போட்டியில் 2 வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, ‘டி’ பிரிவில் 2வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?