Advertisement


பாட்மின்டன் தரவரிசை: செய்னா பின்னடைவு

பிப்ரவரி 08, 2018.
 Comments  
 


World Badminton Ranking, Saina, Sindhu
 

புதுடில்லி: உலக பாட்மின்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை செய்னா நேவல், 11வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான தரவரிசை பட்டியலை, உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) வெளியிட்டது. பெண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் சிந்து, 4வது இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீராங்கனை செய்னா நேவல், 10வது இடத்தில் இருந்து 11வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் பிரனாய், 11வது இடத்தில் இருந்து 10வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் ஸ்ரீகாந்த், 5வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்தியாவின் சாய் பிரனீத், 17 வது இடம் பிடித்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா, சிக்கி ரெட்டி ஜோடி, 24வது இடத்தில் இருந்து 21வது இடத்துக்கு முன்னேறியது. பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி ஜோடி, 31வது இடத்தில் இருந்து 25வது இடம் பிடித்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக்சாய்ராஜ், சிராக் செட்டி ஜோடி, 27 வது இடத்தில் இருந்து 25வது இடத்துக்கு முன்னேறியது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?