Advertisement


பெடரேஷன் டென்னிஸ்: இந்தியா மீண்டும் ஏமாற்றம்

பிப்ரவரி 07, 2018.
 Comments  
 


Fed Cup Tennis, India, Kazakhstan
 

புதுடில்லி: பெடரேஷன் கோப்பை டென்னிஸ், ‘ஆசிய–ஓசியானியா’ பிரிவு லீக் போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி, 1–2 என, கஜகஸ்தானிடம் தோல்வியடைந்தது.

டில்லியில், பெண்களுக்கான பெடரேஷன் கோப்பை டென்னிஸ், ‘குரூப்–1’, ‘ஆசிய–ஓசியானியா’ பிரிவு போட்டிகள் நடக்கிறது. இதில் இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட 8 அணிகள், 2 பிரிவுகளாக விளையாடுகின்றன. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் 1–2 என, சீனாவிடம் வீழ்ந்தது.

இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா, கஜகஸ்தான் அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் கர்மன் கவுர் தண்டி, 3–6, 2–6 என்ற நேர் செட் கணக்கில் கஜகஸ்தானின் ஜரினா டியாசிடம் வீழ்ந்தார். இரண்டாவது போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, 6–3, 1–6, 6–4 என்ற கணக்கில் கஜகஸ்தானின் யுலியா புடின்ட்சேவாவை தோற்கடித்தார்.

இதனையடுத்து போட்டி 1–1 என சமநிலை வகித்தது. வெற்றியாளை நிர்ணயிக்கும் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, பிரார்தனா தாம்ப்ரே ஜோடி, 0–6, 4–6 என்ற நேர் செட் கணக்கில் கஜகஸ்தானின் ஜரினா டியாஸ், யுலியா புடின்ட்சேவா ஜோடியிடம் வீழ்ந்தது.

முடிவில் இந்திய அணி, 1–2 என, மீண்டும் தோல்வியடைந்து ஏமாற்றியது. கடைசி லீக் போட்டியில் (பிப். 9) இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?