Advertisement


கோட்டைவிட்டது சென்னை அணி * கேப்டனுக்கு ‘ரெட் கார்டு’

பிப்ரவரி 06, 2018.
 Comments  
 


indian soccer league, chennai, bangalore ISL
 

சென்னை: பரபரப்பான ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் சென்னை அணி, 1–3 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

இந்தியாவில், ஐ.எஸ்.எல், கால்பந்து தொடரின் நான்காவது சீசன் தற்போது நடக்கிறது. சென்னையில் நேற்று நடந்த லீக் போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடத்தில் இருந்த பெங்களூரு (27 புள்ளி), சென்னை (23) அணிகள் மோதின.

முதல் பாதி சமன்

போட்டி துவங்கிய 2வது நிமிடம் ஹர்மன்ஜோத்திடம் இருந்து வந்த பந்தை தலையால் வாங்கிய பெங்களூரு அணி கேப்டன் சுனில் செத்ரி, சக வீரர் ஹாவோகிப்பிற்கு தர, அவர் கோலாக மாற்றினார். போட்டியின் 33வது நிமிடம் சென்னையின் ஜெர்ரியிடம் இருந்து பந்தை பெற்ற சக வீரர் நெல்சன், கோல் போஸ்ட்டை நோக்கி அடித்தார்.

அங்கிருந்த பிரான்சிஸ்கோ, தலையால் முட்டி, சென்னைக்காக ஒரு கோல் அடித்து அசத்தினார். முதல் பாதி 1–1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

கேப்டனுக்கு ‘ரெட்’

இரண்டாவது பாதியில் சற்று முரட்டு ஆட்டத்தில் இறங்கிய பெங்களூரு வீரர்கள் டெல்காடோ (53 வது), ஹாவோகிப் (55வது), ‘எல்லோ கார்டு’ பெற்றனர். 63 வது நிமிடத்தில் பெங்களூரு அணிக்கு ‘பிரீ கிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதில் டெல்காடோ அடித்த பந்தை, மிக்கு கோலாக மாற்றினார்.

போட்டியின் 71வது நிமிடம், அந்தரத்தில் பறந்து பந்தை தட்டிச் செல்ல முயன்ற சென்னை அணி கேப்டன் செரினோ, எதிரணி வீரரை கீழே தள்ளியதாக, ‘எல்லோ கார்டு’ பெற்றார். இப்போட்டியில் இது இரண்டாவது முறை (10, 71 வது) என்பதால், உடனடியாக ‘ரெட் கார்டு’ காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

10 வீரர்கள்

இதனால், 10 வீரர்களுடன் விளையாடிய சென்னை அணிக்கு, 76வது நிமிடம் ‘பெனால்டி’ வாய்ப்பு கிடைத்தது. எளிதாக கோல் அடிக்க வேண்டிய நிலையில், பந்தை மெதுவாக அடித்து, ஜீஜே கோட்டை விட, சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடைசி கட்டத்தில் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் பெங்களூரு அணிக்கு சுனில் செத்ரி கூடுதலாக ஒரு கோல் அடித்தார். முடிவில் சென்னை அணி 1–3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இதுவரை நடந்த போட்டிகள் முடிவில், பெங்களூரு (30), சென்னை (23) அணிகள் முதல் இரு இடத்தில் உள்ளன. தலா 22 புள்ளிகள் பெற்ற புனே, ஜாம்ஷெட்பூர் அணிகள் அடுத்த இரு இடங்களில் உள்ளன.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?