Advertisement


மோமினுல் சாதனை சதம்: வங்கதேசம் ‘டிரா’

பிப்ரவரி 04, 2018.
 Comments  
 


Mominul Haque
 

சிட்டகாங்: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், மோமினுல் ஹக் சாதனை சதம் அடிக்க, வங்கதேச அணி ‘டிரா’ செய்தது.

வங்கதேசம் சென்றுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சிட்டகாங்கில் நடந்தது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 513, இலங்கை 713 ரன்கள் (‘டிக்ளேர்’) எடுத்தது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், வங்கதேச அணி, 2வது இன்னிங்சில், 3 விக்கெட்டுக்கு, 81 ரன்கள் எடுத்திருந்தது. மோமினுல் ஹக் (18) அவுட்டாகாமல் இருந்தார்.

ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் மோமினுல் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். இவருக்கு லிட்டன் தாஸ் கைகொடுத்தார். பொறுப்புடன் விளையாடிய மோமினுல், இரண்டாவது இன்னிங்சிலும் சதம் கடந்தார். இதன்மூலம், ஒரு டெஸ்டின், இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த, முதல் வங்கதேச வீரர் என்ற சாதனை படைத்தார்.

கேப்டன்கள் சம்மதம்:

தன் பங்கிற்கு லிட்டன் தாஸ் அரைசதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 180 ரன் சேர்த்தபோது, மோமினுல் (105) ஆட்டமிழந்தார். ஹெராத் ‘சுழலில்’ லிட்டன் தாஸ் (94) சிக்கினார். வங்கதேச அணி, 2வது இன்னிங்சில், 5 விக்கெட்டுக்கு, 307 ரன்கள் எடுத்து, 107 ரன்கள் முன்னிலை வகித்திருந்தபோது, இரு அணி கேப்டன்களும் கடைசி நாள் ஆட்டத்தை முடித்துக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர். 

இதனையடுத்து, போட்டி ‘டிரா’ என, அறிவிக்கப்பட்டது. கேப்டன் மகமுதுல்லா (28), மொஸ்டாக் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?