Advertisement


‘உதை’ நடுவருக்கு தடை

பிப்ரவரி 02, 2018.
 Comments  
 


tony Chapron
 

பாரிஸ்: வீரரை உதைத்த நடுவர் டோனி சப்ரோனுக்கு மூன்று மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் கிளப் அணிகளுக்கு இடையே ‘லீக் ஒன்’ கால்பந்து தொடர் நடக்கிறது. கடந்த 14ம் தேதி நடந்த போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன், நான்டிஸ் அணிகள் மோதின. இதன் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90+1 நிமிடம்) நான்டிஸ் வீரர் தியாகோ கார்லோஸ் பந்தை தட்டி செல்ல முயற்சித்தார். இவருடன் நடுவர் டோனி சப்ரோன் (பிரான்ஸ்) ஓடி வந்தார். எதிர்பாராதவிதமாக, கார்லோஸ் மோதியதில் டோனி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

கோபத்தில் டோனி:

இந்த கோபத்திலிருந்த இவர், தனது காலால் கார்லோசை உதைத்தார். அப்படியும் சீற்றம் குறையாத டோனி, அந்த வீரருக்கு ‘ரெட் கார்டு’ காட்டி வெளியே அனுப்பினார். இப்பிரச்னை குறித்து, பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பின் ஒழுங்குமுறைக்குழு விசாரித்தது. இதில், டோனி நேரடியாக ஆஜரானார். முடிவில், இவருக்கு ஒட்டுமொத்தமாக ஆறு மாதம் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதில், மூன்று மாதத்திற்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டோனி கூறுகையில்,‘‘ போட்டியின்போது கார்லோஸ் மோதியதில் அதிக வலியை உணர்ந்தேன். இதனால்தான், அவரின் காலை உதைத்துவிட்டேன். எனது தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,’’ என்றார்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?