Advertisement


அடடே அடிலெய்டு: ஒரு ரன்னில் வெற்றி

பிப்ரவரி 02, 2018.
 Comments  
 


Adelaide Strikers
 

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடக்கும் ‘பிக் பாஷ் டுவென்டி–20’ தொடரின் பைனலுக்கு அடிலெய்டு அணி முன்னேறியது. மெல்போர்ன் அணிக்கு எதிரான அரையிறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் ‘பிக் பாஷ் டுவென்டி–20’ உள்ளூர் தொடர் நடக்கிறது. அடிலெய்டில் நடந்த இதன் இரண்டாவது அரையிறுதியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற அடிலெய்டு அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.

அடிலெய்டு அணிக்கு ஜோனோ டீன் (19) ஏமாற்றினார். வெதரால்டு 57 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கில் வெளியேற, அடிலெய்டு அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. ஹெட் (85), நீசர் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

பின், களமிறங்கிய மெல்போர்ன் அணிக்கு கேப்டன் கேமிரான் ஒயிட் (2) அதிர்ச்சி தந்தார். ஹாரிஸ் (45) அரை சத வாய்ப்பை இழந்தார். ரஷித் கான் ‘சுழலில்’ லுாட்மேன் (28) சிக்கினார். டுவைன் பிராவோ 26 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் 3 ரன் தேவை என்ற நிலையில், லாப்லின் பந்தை போலார்டு எதிர் கொண்டார். இதில் ஒரு ரன் மட்டும் கிடைக்க, மெல்போர்ன் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 177 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது. போலார்டு (29), கூப்பர் (36) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதன் மூலம், அடிலெய்டு அணி பைனலுக்கு முன்னேறியது. வரும் 4ல் நடக்கவுள்ள பைனலில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ்– அடிலெய்டு அணிகள் மோதுகின்றன.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?