Advertisement


இளம் பாகிஸ்தான் ‘நம்பர்–3’

பிப்ரவரி 01, 2018.
 Comments  
 


ICC U19 World Cup Cricket, Pakistan, Afghanistan
 

குயின்ஸ்டவுன்: ‘ஜூனியர்’ உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மூன்றாவது இடம் பிடித்தது.

நியூசிலாந்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. குயின்ஸ்டவுனில் 3–4வது இடத்திற்கான போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோத இருந்தன. போட்டி துவங்கும் முன்பே, மழை பெய்தது. இது தொடரவே, ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

‘டி’ பிரிவில் இடம் பெற்ற இந்த இரு அணிகளும் தலா 4 புள்ளி பெற்றிருந்தன. இருப்பினும், ‘ரன் ரேட்’ அடிப்படையில் பாகிஸ்தான் (+1.404), ஆப்கானிஸ்தானை (+0.639) விட முன்னிலையில் இருந்தது. இதனால், பாகிஸ்தானுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. இதற்கு முன், கடந்த 2000, 2010ல் பாகிஸ்தான் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை, முதல் முறையாக இத்தொடரில் சிறந்த இடம் (4வது) பெற்றது. இதற்கு முன், 2014ல் 7வது இடம் பிடித்திருந்தது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?