Advertisement


அசரன்காவுக்கு சிறப்பு அனுமதி

பிப்ரவரி 01, 2018.
 Comments  
 


Victoria Azarenka, Belarus, Indian Wells Open Tennis
 

லாஸ் ஏஞ்சல்ஸ்: இந்தியானாவெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க பெலாரசின் அசரன்காவுக்கு ‘வைல்டு கார்டு’ (சிறப்பு அனுமதி) தரப்பட்டுள்ளது.

பெலாரசின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை அசரன்கா, 28. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் இரண்டு (ஆஸ்திரேலிய ஓபன் 2012, 13) முறை கோப்பை வென்றுள்ளார். இவரது மகன் லியோ, 1. இவரை யார் வளர்ப்பது என, ஆண் நண்பருடன் சட்ட பிரச்னை ஏற்பட்டது. இதனால், கடந்த யு.எஸ்., ஓபன், சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இவர் விளையாடவில்லை.

தற்போது இவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வரும் மார்ச் 5ல் துவங்கும் இந்தியானா வெல்ஸ் ஓபன் டென்னிசில் பங்கேற்க முடிவெடுத்தார். இதில் அசரன்கா பங்கேற்க, சிறப்பு அனுமதி (‘வைல்டு கார்டு’) தரப்பட்டது. கடந்த 2012, 16ல் இவர், இத்தொடரில் பட்டம் வென்றிருந்தார்.

இது குறித்து அசரன்கா கூறுகையில்,‘‘ இந்தியானாவெல்ஸ் தொடரில் விளையாட எப்போதும் விருப்பமாக இருப்பேன். மீண்டும் இதில் பங்கேற்று மூன்றாவது முறையாக கோப்பை வெல்வேன் என நம்புகிறேன்,’’ என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?