Advertisement


டர்பனில் இந்தியா ‘டாப்’ * சதம் விளசினார் கோஹ்லி

பிப்ரவரி 01, 2018.
 Comments [1]  
 


India, South Africa, One Day Cricket, Kuldeep
 

டர்பன்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. கோஹ்லி, ஒருநாள் அரங்கில் 33வது சதம் விளாசி அசத்தினார்.

தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி, ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி, நேற்று டர்பனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டுபிளசி, பேட்டிங் தேர்வு செய்தார்.

ஜோகனஸ்பர்க் டெஸ்டில் சிறப்பாக விளையாடிய ரகானேவுக்கு, ஒருநாள் அணியில் இடம் கிடைத்தது. தவிர, குல்தீப் யாதவ், சகால் என, இரு ‘சுழல்’ வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.

குல்தீப் குதுாகலம்

தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா, குயின்டன் டி காக் ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. பும்ரா ‘வேகத்தில்’ ஆம்லா, 16 ரன்னுக்கு அவுட்டானார். சகால் ‘சுழலில்’ குயின்டன் (34), மார்க்ரம் (9) அவுட்டாகினார். தன் பங்கிற்கு பந்தை சுழற்றிய குல்தீப், முதலில் டுமினி (12), அடுத்து, அபாயகரமான மில்லரை (7), வெளியேற்றினார். மீண்டும் மிரட்டிய குல்தீப், இம்முறை கிறிஸ் மோரிசை (37), போல்டாக்கி, குதுாகலம் அடைந்தார். 

டுபிளசி சதம்

பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த டுபிளசி, ஒருநாள் அரங்கில் 9வது, இந்தியாவுக்கு எதிராக 2வது சதம் கடந்தார். இவர், 120 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரபாடா (1) ரன் அவுட்டாக, தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது. பெலுக்வாயோ (27), மார்கல் (0) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சம் குல்தீப் யாதவ் 3, சகால் 2 விக்கெட் வீழ்த்தினர்.

ரோகித் ‘அவுட்’

பின் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. மார்கல் பந்தில் சிக்சர் அடித்த ரோகித், 20 ரன்கள் எடுத்தார். 29 பந்தில் 35 ரன்கள் எடுத்து நம்பிக்கை தந்த தவான், வீணாக ரன் அவுட்டானார். 

சூப்பர் ஜோடி

பின் கேப்டன் கோஹ்லி, ரகானே இணைந்தனர். மோரிஸ் ஓவரில், கோஹ்லி மூன்று பவுண்டரி அடித்தார். சமீபத்திய ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத ஏமாற்றத்தில் இருந்த ரகானே, கிடைத்த வாய்ப்பை சரியான பயன்படுத்தினார். 24 வது அரைசதம் அடித்த இவர், இம்ரான் தாகிர், மோரிஸ் பந்துகளில், சிக்சர் அடித்தார். 

அசத்தல் சதம்

இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, வெற்றி இலக்கை இந்திய அணி, ஜோராக நெருங்கியது. பெலுக்வாயோ ஓவரில் இரு பவுண்டரி அடித்த கோஹ்லி, ஒருநாள் அரங்கில் 33வது சதம் அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்த நிலையில், 79 ரன்கள் எடுத்த ரகானே அவுட்டானார். அடுத்து கோஹ்லியும் (112) கிளம்பினார்.

கடைசியில் வழக்கம் போல தோனி வந்து ஒரு பவுண்டரி அடித்து, இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்திய அணி 45.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்தது. தோனி (4), பாண்ட்யா (3) அவுட்டாகாமல் இருந்தனர். 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒருநாள் தொடரில் 1–0 என, முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும், இரண்டாவது போட்டி, வரும் 4ம் தேதி, செஞ்சூரியனில் நடக்கவுள்ளது. 

 

வெற்றிக்கு முற்றுப்புள்ளி

தென் ஆப்ரிக்க அணி சொந்தமண்ணில் கடைசியாக பங்கேற்ற 17 ஒருநாள் போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்தது. நேற்றைய தோல்வியை அடுத்து, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 


1

டர்பனில், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், முதன் முறையாக வெற்றி பெற்றது இந்திய அணி. இதற்கு முன், 1992–93 முதல், இந்த அணிக்கு எதிராக பங்கேற்ற 7 போட்டிகளில், 6ல் தோற்றது. ஒரு போட்டிக்கு முடிவில்லை.

 

5

நேற்று 79 ரன்கள் எடுத்த ரகானே, ஒருநாள் அரங்கில், தொடர்ந்து 5வது அரைசதம் அடித்தார். இதற்கு முன் 1994ல் சச்சின், 2012, 2013ல் கோஹ்லி, இதுபோல சாதித்துள்ளனர்.

 

18

இந்தியாவின் கோஹ்லி, தென் ஆப்ரிக்காவின் டுபிளசி என, இரு அணி கேப்டன்களும், பேட்டிங்கில் மூன்றாவது இடத்தில் களமிறங்கினர். இருவரும் 18ம் எண் கொண்ட ‘ஜெர்சி’ அணிந்திருந்தனர். கடைசியில் இருவரும் சதம் அடித்தது, ஸ்பெஷலாக இருந்தது.

 

33

டர்பன் போட்டியில் 112 ரன்கள் விளாசிய கோஹ்லி, ஒருநாள் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்களில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். முதல் இடத்தில் இந்தியாவின் சச்சின் (49) உள்ளார். 

தவிர, தென் ஆப்ரிக்க மண்ணில் கோஹ்லி அடித்த முதல் ஒருநாள் சதமாகவும் இது அமைந்தது.

* 9 வெவ்வேறு அன்னியமண்ணில் பங்கேற்ற ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்து இருந்த கோஹ்லி, தென் ஆப்ரிக்க மண்ணிலும் நேற்று சதம் விளாசினார். 

 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
r.sugumar 2 weeks ago | Report abuse
வாழ்துக்கள் நமது கேப்டனின் 34 வது சதத்திற்கு மேலும் வெற்றிகள் தொடரட்டும் .....




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?