Advertisement


தனஞ்செயா சதம்: இலங்கை பதிலடி

பிப்ரவரி 01, 2018.
 Comments  
 


Srilanka, Bangladesh, Test Cricket, Dhananjaya de Silva
 
சிட்டகாங்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் தனஞ்செயா டி சில்வா சதம் அடிக்க, இலங்கை அணி பதிலடி தந்தது.

வங்கதேசம் சென்றுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சிட்டகாங்கில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 374 ரன்கள் எடுத்திருந்தது. மோமினுல் ஹக் (175), கேப்டன் மகமுதுல்லா (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

மகமுதுல்லா அரைசதம்: இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஹெராத் ‘சுழலில்’ மோமினுல் (176), முஸ்தாக் ஹொசைன் (8) சிக்கினர். மெகதி ஹசன் (20), சன்ஜாமல் (24) விரைவில் திரும்பினர். நிதானமாக விளையாடிய மகமுதுல்லா அரை சதம் கடந்தார். முடிவில், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 513 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. மகமுதுல்லா (83) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் அதிகபட்சமாக லக்மல், ஹெராத் தலா 3 விக்கெட் வீழ்த்தினார்.

தனஞ்செயா அபாரம்: பின், களமிறங்கிய இலங்கை அணியை ‘டக்’ அவுட்டாகி ஏமாற்றினார் கருணாரத்னே. குசல் மெண்டிஸ், தனஞ்செயா இணைந்து பொறுப்புடன் விளையாடினர். ஆடுகளம் ‘பேட்டிங்’  சாதகமாக அமைய, குசல் மெண்டிஸ் அரை சதம் எட்டினார். தனஞ்செயா டெஸ்ட் அரங்கில் நான்காவது சதம் கடந்தார். இரண்டாவது நாள் ஆட்ட முடிவில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்து, 326 ரன்கள் பின்தங்கி இருந்தது. குசல் மெண்டிஸ் (83), தனஞ்செயா (104) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?