Advertisement


1,045 ரன் குவித்த மும்பை மாணவர்

ஜனவரி 31, 2018.
 Comments [1]  
 


Tanishq Gavate
 

மும்பை: நவி மும்பையை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவர் தனிஷ்க் கவேட், உள்ளூர் போட்டியில் 1,045 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் இருந்தார்.

மும்பையில் ‘நவி மும்பை’ கோப்பைக்கான, கிரிக்கெட் தொடர் (14 வயதுக்குட்டோர்) நடந்தது. இதன் அரையிறுதியில், தனியார் அகாடமி சார்பிலான யஷ்வந்திராவோ சவான் லெவன் அணிக்காக விளையாடினார் 13 வயது மாணவர் தனிஷ்க் கவேட்.  தான் படிக்கும் யஷ்வந்திராவோ சவான் லெவன் ஆங்கில பள்ளிக்கு எதிரான இப்போட்டியில், 515 பந்தில், 149 பவுண்டரி, 67 சிக்சர்கள் உட்பட 1,045 ரன்கள் குவித்தார். இதற்கு முந்தைய போட்டியில் இவர், 316 ரன்கள் விளாசி இருந்தார். இத்தொடருக்கு மும்பை கிரிக்கெட் சங்கத்தின் அங்கீகாரம் பெறவில்லை என்பதால், இவரது சாதனை கண்டுகொள்ளப்படவில்லை. இதற்கு முன் 2016ல் மும்பை மாணவர் பிரனவ் தன்வேட், 1009 ரன்கள் குவித்ததே சாதனை.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
ganapathi subramanaian b 3 weeks ago | Report abuse
ஆயிரம் ரன்கள் பவுண்டரி சிக்ஸாரில் மட்டுமே தனிஸ்க்கின் சாதனை வியப்பில் ஆழ்த்துகிறது




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?