Advertisement


மோமினுல் சதம்: வங்கம் ரன் குவிப்பு

ஜனவரி 31, 2018.
 Comments  
 


Mominul Haque
 

சிட்டகாங்: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் மோமினுல் ஹக் சதம் அடிக்க, வங்கதேச அணி முதல் நாளில் 374 ரன்கள் குவித்தது.

வங்கதேசம் சென்றுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சிட்டகாங்கில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் மகமுதுல்லா ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

சிறப்பான துவக்கம்:

வங்கதேச அணிக்கு தமிம் இக்பால், இம்ருல் கெய்ஸ் அபார துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்தபோது, அரை சதம் கடந்த தமிம் (52) ஆட்டமிழந்தார். இம்ருல் 40 ரன்களில் அவுட்டானார். பின், இணைந்த மோமினுல் ஹக், முஷ்பிகுர் ரகிம் மிரட்டியது. எதிரணி பந்துவீச்சை சாதுர்யமாக எதிர் கொண்ட இவர்கள், ‘ஸ்கோரை’ உயர்த்தினர்.

அதிவேக சதம்:

பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த மோமினுல், 96வது பந்தில் 5வது சதம் எட்டினார். இதன் மூலம், டெஸ்ட் அரங்கில் தமிம் இக்பாலுக்குப்பின் (94 பந்து, எதிர்– இங்கிலாந்து, லார்ட்ஸ், 2010) டெஸ்டில் அதிவேக சதம் அடித்த இரண்டாவது வங்கதேச வீரரானார். மூன்றாவது விக்கெட்டுக்கு 236 ரன் சேர்த்த நிலையில், முஷ்பிகுர் (92) சத வாய்ப்பை இழந்தார். லிட்டன் தாஸ் டக்–அவுட்டானார். மோமினுல் தனது அபார ஆட்டத்தை தொடர, எதிரணி பவுலர்கள் விரக்தி அடைந்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 374 ரன்கள் எடுத்திருந்தது. மோமினுல் (175), மகமுதுல்லா (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?