Advertisement


பைனலுக்கு முன்னேறியது இளம் ஆஸி.,

ஜனவரி 29, 2018.
 Comments  
 


Australia, Afghanistan, U19 World Cup Cricket, Semi Final
 

கிறைஸ்ட்சர்ச்: ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறியது. அரையிறுதியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

நியூசிலாந்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடர் நடக்கிறது. கிறைஸ்ட்சர்ச் நகரில் நடந்த அரையிறுதியில், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான் அணி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு இம்ராஹிம் ஜத்ரான் (7), ரஹ்மானுல்லா குர்பாஸ் (20) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. பஹிர் ஷா (4), தார்விஷ் ரசூலி (2), நிசார் வாஹ்தத் (11) உள்ளிட்டோர் சொற்ப ரன்னில் அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய இக்ராம் அலி கில் (80), அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார். மற்ற வீரர்கள் ஏமாற்ற, ஆப்கானிஸ்தான் அணி, 48 ஓவரில், 181 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. முஜீப் (12) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் ஜோனாதன் மெர்லோ, 4 விக்கெட் கைப்பற்றினார்.

சுலப இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு மேக்ஸ் பிரயான்ட் (4) ஏமாற்றினார். கேப்டன் ஜேசன் சங்ஹா (26), ஜோனாதன் மெர்லோ (17) நிலைக்கவில்லை. அசத்தலாக ஆடிய துவக்க வீரர் ஜாக் எட்வர்ட்ஸ் (72), அரைசதம் கடந்து நம்பிக்கை தந்தார். பின் இணைந்த பரம் உப்பால் (32*), நாதன் மெக்ஸ்வீனி (22*) வெற்றிக்கு வித்திட்டனர்.

ஆஸ்திரேலிய அணி, 37.3 ஓவரில், 4 விக்கெட்டுக்கு, 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் ஜூனியர் உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணி, 5வது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றது. முன்னதாக விளையாடிய 4 பைனலில், 3 முறை (1988, 2002, 2010) வெற்றி பெற்று கோப்பை வென்றது. ஒரு முறை (2012) தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?