Advertisement


‘கிங்’ பெடரர்: ஆஸி., ஓபனில் சாம்பியன்

ஜனவரி 28, 2018.
 Comments [2]  
 


federer
 

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் கோப்பை வென்று அசத்தினார் பெடரர். இதன் மூலம் 20வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதித்தார்.

நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்போர்னில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்–2’ வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 6வது இடத்தில் உள்ள குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர் கொண்டார். எதிர்பார்த்ததுபோல, முதல் செட்டை பெடரர் 6–2 என கைப்பற்றினார். ‘டை–பிரேக்கர்’ வரை சென்ற அடுத்த செட்டை சிலிச் 7–6 வென்றார். இத்தொடரில், முதல் முறையாக பெடரர் செட்டை பறிகொடுத்தார். சரிவிலிருந்து விரைவாக மீண்ட இவர் மூன்றாவது செட்டை 6–3 என வசப்படுத்தினார்.

இவருக்கு சற்றும் குறையாத திறமையை வெளிப்படுத்திய சிலிச், நான்காவது செட்டை 6–3 என தனதாக்கினார். 36 வயதிலும் 18 வயது வீரரைப்போல மீண்டு வந்தார் பெடரர்.  இவரது ஆதிக்கத்திற்கு முன் 29 வயதான சிலிச்சின் செயல்பாடு எடுபடவில்லை. ஐந்தாவது செட்டை 6–1 என வென்றார். 3 மணி நேரம் 3:19 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், பெடரர் 6–2, 6–7, 6–3, 3–6, 6–1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

20

36 வயதான பெடரர், ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாம் அரங்கில் தனது 20வது பட்டத்தை வசப்படுத்தினார். இதுவரை, ஆஸ்திரேலிய ஓபனில் 6 (2004, 06, 07, 10, 17, 18), பிரெஞ்ச் ஓபனில் ஒன்று (2009), விம்பிள்டனில் 8 (2003, 04, 05, 06, 07, 09, 12, 17), யு.எஸ்., ஓபனில் 5 (2004, 05, 06, 07, 08) பட்டம் வென்றுள்ளார்.

முதலிடம்

கிராண்ட்ஸ்லாம் அரங்கில் அதிக பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் பெடரர் (20) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்த இடத்தில் ஸ்பெயினின் நடால் (16) உள்ளார். 

ஜோகோவிச்சுடன் இணைந்தார்

ஆஸ்திரேலிய ஓபனில் அதிக முறை பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ராய் எம்ரசன், செர்பியாவின் ஜோகோவிச் உடன் இணைந்தார் பெடரர். இவர்கள் தலா 6 முறை கோப்பை கைப்பற்றி உள்ளனர்.

20 கோடி

கோப்பை வென்ற பெடரர் ரூ. 20 கோடி பரிசுத்தொகையை தட்டிச்சென்றார். பைனலில் வீழ்ந்த மரின் சிலிச்சிற்கு ரூ. 10 கோடி கிடைத்தது.

9

சர்வதேச அரங்கில் மரின் சிலிச்சிற்கு எதிராக பெடரர் தனது 9வது வெற்றியை பதிவு செய்தார். இதுவரை இருவரும் 10 போட்டிகளில் மோதி உள்ளனர். இதில் சிலிச் ஒன்று, பெடரர் 9 வெற்றி பெற்றுள்ளனர்.

ஆனந்த கண்ணீர்

கோப்பை வென்ற பின் பெடரர் கூறுகையில்,‘‘ எனது வாழ்நாள் கனவு நனவாகி உள்ளது. என்னால் நம்பவே முடியவில்லை. இந்த ஆண்டடை சிறப்பான முறையில் துவக்கி உள்ளேன். எனது வெற்றிக்கு கைகொடுத்த பயிற்சியாளர் குழு, ரசிகர்கள் நன்றி,’’ என்றார். பின், உணர்ச்சி மிகுதியில் கண்கலங்கினார். அரங்கிலிருந்து ரசிகர்களி்ன கைதட்டல் அதிகமாக, நன்றி, நன்றி என கூறியபடியே, தேம்பி தேம்பி அழுதார். இவரின் ஆட்டத்தை நேரடியாக கண்ட மனைவி மிர்காவும் மகிழ்ச்சியில் உறைந்தார்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
3   0  
Ajay Raja 4 weeks ago | Report abuse
டென்னிஸின் கடவுள்... 20 கிராண்ட்ஸ்லாம் முதல் 96 பட்டங்களை வென்று சொந்த சாதனையை தானே முறியடித்துக் கொள்ளும் அல்ட்ரா லெஜன்ட்... உலகின் அனைத்து விளையாட்டு வீரர்கள் மத்தியில் வருமானத்தில் முதலிடம் வகிக்கும் எளிய பணக்காரன்... பல ஏழை நாடுகளில் தொண்டு நிறுவனங்கள் நடத்தி எண்ணற்ற உதவிகள் புரிந்து வரும் கொடை வள்ளல்... பல இளம் வீரர்களின் ரோல் மாடல்... கிரிக்கெட் முதல் பேஸ்பால் வரை எல்லா விளையாட்டு நட்சத்திரங்களின் சிறந்த நண்பன்... ஆட்டக்களத்தில் வெறி பிடித்த சிங்கம், ஆனால் குணத்தில் குழந்தை... அகந்தை இல்லா எளியவன்... சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்க்கும் ஒரே நாயகன்... வர்னனையாளர் முதல் செய்தியாளர் வரை இவன் வெற்றியை அறிவிக்கவே விரும்புவார்கள்... வெற்றித் தருணத்தில் இவன் சிந்தும் ஆனந்த கண்ணீருக்கு போட்டியின் எதிராளி ரசிகர்களின் கண்களையும் கலங்கடிக்கும் சக்தி உண்டு.....பில்கேட்ஸ் முதல் பட்டித்தொட்டி வரை இவனுக்கு பேன்ஸ்.. உலகெங்கும் இவனைப்பற்றி தான் ட்வீட்ஸ்... மொத்தத்தில் இவ்வுலகின் வரப்பிரசாதம் தான் இந்த சுவிஸ்... "ரோஜர் பெடரர்"....


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
1   0  
Ilavarasan 4 weeks ago | Report abuse
தங்கள் வெற்றி தொடரட்டும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?