Advertisement


போபண்ணா ஜோடி 2வது இடம்

ஜனவரி 28, 2018.
 Comments  
 


Bopanna, Babos, Australian Open Tennis
 

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் தோல்வியடைந்த இந்தியாவின் ரோகன் போபண்ணா, இத்தாலியின் டிமியா பாபாஸ் ஜோடி, 2வது இடம் பிடித்தது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், நடப்பு ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் நடந்தது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில், இந்தியாவின் ரோகன் போபண்ணா, இத்தாலியின் டிமியா பாபாஸ் ஜோடி, கனடாவின் கேப்ரிலா டப்ரோவ்ஸ்கி, குரோஷியாவின் மேட் பவிச் ஜோடியை எதிர்கொண்டது. இதன் முதல் செட்டை 6----–2 எனக் கைப்பற்றிய போபண்ணா ஜோடி, இரண்டாவது செட்டை 4–6 எனக் கோட்டைவிட்டது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் ‘சூப்பர் டை–பிரேக்கரில்’ மீண்டும் ஏமாற்றிய போபண்ணா ஜோடி 9–11 என இழந்தது. ஒரு மணி நேரம், 8 நிமிடம் நீடித்த போட்டியில் போபண்ணா, பாபாஸ் ஜோடி 6–2, 4–6, 9–11 என்ற கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?