Advertisement


செய்னா நேவல் ஏமாற்றம்

ஜனவரி 27, 2018.
 Comments  
 


Indonesia Masters Badminton, Saina, Second Place
 
ஜகார்தா: இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலில், இந்திய வீராங்கனை செய்னா நேவல் தோல்வியடைந்து ஏமாற்றினார்.

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில், மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்–1’ வீராங்கனை சீனதைபேயின் டாய் டிசூ யிங், 12வது இடத்தில் உள்ள இந்தியாவின் செய்னா நேவல் மோதினர்.

இதன் முதல் செட்டை 9–21 என இழந்த செய்னா, இரண்டாவது செட்டை 13–21 எனக் கோட்டைவிட்டார். மொத்தம் 27 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய செய்னா நேவல், 9–21, 13–21 என்ற  நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து, 2வது இடம் பிடித்தார்.

இதன்மூலம், டாய் டிசூ யிங்கிற்கு எதிராக தொடர்ச்சியாக 7 வது தோல்வியை பெற்றார் செய்னா. இதுவரை இவர்கள் மோதிய 14 போட்டிகளில், செய்னா 5, டாய் டிசூ யிங் 9ல் வெற்றி பெற்றுள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?