Advertisement


அரையிறுதிக்கு முன்னேறியது ஆப்கன்: ஜூனியர் உலக கோப்பையில் அசத்தல்

ஜனவரி 25, 2018.
 Comments  
 


ICC U19 World Cup Cricket, Afghanistan, New Zealand
 

கிறைஸ்ட்சர்ச்: ‛ஜூனியர்’ உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறி ஆப்கானிஸ்தான் சாதித்தது. காலிறுதியில் நியூசிலாந்தை 202 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நியூசிலாந்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த காலிறுதியில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ‛டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான் அணி ‛பேட்டிங்’ தேர்வு செய்தது.

‛சூப்பர்’ ஜோடி: ஆப்கானிஸ்தான் அணிக்கு ரகமதுல்லா (69), இப்ராகிம் (68) ஜோடி ‛சூப்பர்’ துவக்கம் தந்தது. அஜ்மதுல்லா 23 பந்தில் 66 ரன் விளாசினார். பகிர் ஷா அரைசதம் கடந்து கைகொடுத்தார். முடிவில், ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 309 ரன்கள் குவித்தது. பகிர் ஷா (67) அவுட்டாகாமல் இருந்தார்.

‛சுழல்’ ஜாலம்: கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு, ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்கள் தொல்லை தந்தனர். முஜிப் ‛சுழலில்’ ஜகோப் (5), கேப்டன் போஷியர் (0) சிக்கினர். ஆலன் 13 ரன்கள் எடுத்தார். சந்தீப் ‘டக்–-அவுட்’ ஆனார். குயஸ் அகமது பந்துவீச்சில் கிளார்க் (38), பிலிப்ஸ் (31) ஆட்டமிழந்தனர். சொந்த மண்ணில் சொதப்பிய, நியூசிலாந்து அணி 28.1 ஓவரில் 107 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. ஆப்கன் சார்பில் அதிகபட்சமாக முஜிப், குயஸ் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம், ‛ஜூனியர்’ உலக கோப்பை அரையிறுதிக்கு முதல் முறையாக ஆப்கானிஸ்தான் முன்னேறியது. இதற்கு முன், அதிகபட்சமாக காலிறுதி வரை மட்டுமே (2014) முன்னேறி இருந்தது. வரும் 29ல் நடக்கவுள்ள அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?