Advertisement


ஆஸி., ஓபன்: அரையிறுதியில் பெடரர்

ஜனவரி 24, 2018.
 Comments  
 


Australian Open Tennis, Roger Federer, Semi Final
 

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முன்னேறினார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர் மெல்போர்னில் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் ‘நம்பர்–2’ வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெரடர், 20வது இடத்திலுள்ள செக் குடியரசின் தாமஸ் பெர்டிச் மோதினர். 36 வயதிலும் பெடரரின் ஆக்ரோஷம் குறையவில்லை. ‘நடப்பு சாம்பியனான’ இவர், ‘டை–பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை 7–6 என கைப்பற்றினார். அடுத்த இரண்டு செட்டையும் 6–3, 6–4 என வசப்படுத்தினார்.

இரண்டு மணி நேரம் 14 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், பெடரர் 7–6, 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். இதன் மூலம், 14வது முறையாக இத்தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார். 

ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாம் அரங்கில் பெடரர் தனது 43வது அரையிறுதியில் விளையாட உள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில் 105 போட்டியில் 92 வெற்றியை பதிவு செய்துள்ளார்.

ஹியான் அசத்தல்: மற்றொரு காலிறுதியில் தென் கொரியாவின் ஹியான் சங் (58வது இடம்), தரவரிசையில் 97வது இடத்திலுள்ள அமெரிக்காவின் டெனிஸ் சான்ட்கிரனை எதிர் கொண்டார். நான்காவது சுற்றில் நட்சத்திர வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தியதால் ஹியான் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இதற்கேற்ப, துடிப்பாக செயல்பட்ட ஹியான் 6–4, 7–6, 6–3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய தென் கொரியா நட்சத்திரம் என்ற சாதனை படைத்தார். தவிர, 2004க்குப்பின் (ரஷ்யாவின் மாரட் சபின்) தரவரிசையில் பின்தங்கிய இடத்திலிருந்து இத்தொடரின் அரையிறுதிக்குள் நுழைந்த வீரரானார்.

அரையிறுதியில் குரோஷியாவின் மரின் சிலிச்– பிரிட்டனின் எட்மன்ட், சுவிட்சர்லாந்தின் பெடரர்– தென் கொரியாவின் ஹியான் மோதுகின்றனர்.

கெர்பர் அபாரம்: பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ‘நம்பர்–16’ வீராங்கனையான ஜெர்மனியின் கெர்பர், அமெரிக்காவின் மடிசன் கீசை (20வது இடம்) எதிர் கொண்டார். முன்னாள் சாம்பியனான (2016) கெர்பர், முதல் செட்டை 6–1 என எளிதாக தனதாக்கினார். அடுத்த செட்டையும் 6–2 என வசப்படுத்தினார். 51 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில், கெர்பர் 6–1, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

சிமோனா வெற்றி: மற்றொரு காலிறுதியில் ‘நம்பர்–1’ வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலெப், 6வது இடத்திலுள்ள செக் குடியரசின் பிலிஸ்கோவாவை சந்தித்தார். 

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிமோனா 6–3, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதியில் சிமோனா ஹாலெப்–கெர்பர், டென்மார்க்கின் வோஸ்னியாக்கி– பெல்ஜியத்தின் மார்டென்ஸ் மோத உள்ளனர்.

போபண்ணா ஜோடி அபாரம்

கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் போபண்ணா, ஹங்கேரியின் டிமியா ஜோடி, அமெரிக்காவின் அபிகய்ல், கொலம்பியாவின் ஜுயன் செபாஸ்டியன் ஜோடியுடன் மோதியது. இதில் ஜொலித்த போபண்ணா, டிமியா ஜோடி 6–4, 7–6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?