Advertisement


வங்கதேசம் ‘ஹாட்ரிக்’ வெற்றி

ஜனவரி 23, 2018.
 Comments  
 


tri series cricket, bangladesh beat zimbabwe
 

மிர்புர்: முத்தரப்பு ஒரு நாள் லீக் போட்டியில் வங்கதேச அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது. நேற்று நடந்த லீக் போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வென்றது.

வங்கதேசத்தில் ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் நடக்கிறது. மிர்புரில் நடந்த ஐந்தாவது லீக் போட்டியில் வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.

தமிம் அரை சதம்:

வங்கதேச அணிக்கு அனாமுல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். பின், இணைந்த தமிம் இக்பால், சாகிப் ஜோடி அசத்தியது. இருவரும் அரை சதம் கடந்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு 106 ரன் சேர்த்தபோது, சாகிப் (51) அவுட்டானார். முஷ்பிகுர் ரகிம் 18 ரன்களில் திரும்பினார். கிரீமர் பந்தில் தமிம் (76), மகமுதுல்லா (2) சிக்கினர். மற்ற வீரர்கள் விரைவில் திரும்ப, வங்கதேச அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே சார்பில் கேப்டன் கிரீமர் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.

சாகிப் சுழல் ஜாலம்:

எளிய இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு அதிர்ச்சி துவக்கம் கிடைத்தது. மொர்டசா ‘வேகத்தில்’ மசகட்சா (5), எர்வின் (11) அவுட்டாகினர். சாகிப் சுழற்பந்துவீச்சில் சாலமன் (7), பிரண்டன் டெய்லர் (0) சிக்கினர். அதிகபட்சமாக சிக்கந்தர் 39 ரன் எடுத்தார். பின் வரிசை வீரர்களும் சொதப்ப, ஜிம்பாப்வே அணி 36.3 ஓவரில் 125 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி வீழ்ந்தது. வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சாகிப் 3 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம், வங்கதேச அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?