Advertisement


ஆஸி., ஓபன்: விலகினார் நடால்

ஜனவரி 23, 2018.
 Comments  
 


nadal
 

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியிலிருந்து ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் காயம் காரணமாக விலகினார். 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர் மெல்போர்னில் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ‘நம்பர்–1’ வீரரான ஸ்பெயின் வீரர் நடால், தரவரிசையில் 6வது இடத்திலுள்ள குரோஷியாவின் மரின் சிலிச்சை சந்தித்தார். முதல் செட்டை 6–3 என கைப்பற்றிய நடால், அடுத்த செட்டை 3–6 என பறிகொடுத்தார். 

மூன்றாவது செட்டை 7–6 என தனதாக்கிய நடாலுக்கு, அடுத்த செட்டில் முழங்கால் காயம் தொல்லை தர, அவ்வப்போது சிகிச்சை எடுத்து போட்டியை தொடர்ந்தார். இருப்பினும், இந்த செட்டை 2–6 என இழந்தார். ஐந்தாவது செட்டில் 0–-2 என பின்தங்கியதை அடுத்து, தொடர்ந்து விளையாட முடியாமல் போட்டியில் இருந்து விலகினார். இதனையடுத்து, மரின் சிலிச் 3–6, 6–3, 6–7, 6–2, 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, அரையிறுதிக்குள் நுழைந்தார். 

ஷிவ்டோலினா தோல்வி:

இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ‘நம்பர்–4’ வீராங்கனையான உக்ரைனின் எலினா ஷிவ்டோலினா, தரவரிசையில் 37வது இடத்திலுள்ள பெல்ஜியத்தின் எலிசா மெர்டென்சை எதிர் கொண்டார். இத்தொடரில் முதல் முறையாக பங்கேற்றாலும், மெர்டென்ஸ் கடும் சவால் தந்தார். இதற்கு ஈடுகொடுக்க முடியாத ஷிவ்டோலினா, முதல் செட்டை 4–6 என இழந்தார். தொடர்ந்து ஏமாற்றிய இவர் அடுத்த செட்டையும் 0–6 என பறிகொடுத்தார். ஒரு மணி நேரம் 13 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், ஷிவ்டோலினா 4–6, 0–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். 

மெர்டென்ஸ் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் அரங்கில் அரையிறுதிக்கு முன்னேறினார். தவிர, 2012க்குப்பின் இத்தொடரின் அரையிறுதிக்குள் நுழைந்த இரண்டாவது பெல்ஜியம் வீராங்கனையானார். இதற்கு முன், கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் இந்த இலக்கை எட்டி இருந்தார். 

காலிறுதியில் போபண்ணா ஜோடி

கலப்பு இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் போபண்ணா, ஹங்கேரியின் டிமியா ஜோடி குரோஷியாவின் பிரான்கோ, அமெரிக்காவின் வனியா ஜோடியை சந்தித்தது. அபாரமாக விளையாடிய போபண்ணா, டிமியா ஜோடி 6–4, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?