Advertisement


அகாசியின் அதிசய புத்தகம்: வியக்கும் ஸ்ரீஜேஷ்

ஜனவரி 17, 2018.
 Comments  
 


sreejesh
 

இந்திய ஹாக்கி அணி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ், 31. கடந்த 2004ல் இந்திய ஜூனியர் அணியில் அறிமுகமான இவர், 2006ல் சீனியர் அணிக்காக முதன்முறையாக விளையாடினார். கடந்த 2008 ல் நடந்த ஜூனியர் ஆசிய கோப்பையில், சிறந்த கோல்கீப்பருக்கான விருதை தட்டிச் சென்றார். 2016ல் லண்டனில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இவரது தலைமையிலான இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. ரியோ ஒலிம்பிக்கில் (2016), இவரது தலைமையிலான இந்திய அணி காலிறுதி வரை சென்றது. கடந்த ஆண்டு முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்ட இவர், சுமார் 8 மாதங்களாக எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. தற்போது குணமடைந்துள்ள இவர், நியூசிலாந்தில் நடக்கவுள்ள நான்கு நாடுகளுக்கு இடையிலான ஹாக்கி தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நம்பிக்கை தந்தது:

இதுகுறித்து ஸ்ரீஜேஷ் கூறியது: கடந்த 8 மாதங்களாக எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்தது கவலை அளித்தது. இந்த ஓய்வு நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டேன். முன்னாள் அமெரிக்க டென்னிஸ் வீரர் அகாசியின் சுயசரிதையை வாசித்தேன். இப்புத்தகத்தில் டென்னிஸ் வாழ்க்கையில் நிகழ்ந்த ஏற்றத் தாழ்வுகளை விவரித்துள்ளார்.  சரிவிலிருந்து மீண்டது பற்றியும் தெரிவித்துள்ளார். இதன் மூலம், எந்த ஒரு வீரருக்கும் சோதனை காலம் வரத்தான் செய்யும் என்பதை உணர்ந்து கொண்டேன். இவர், தனது 33 வயதிலும் உலகின் ‘நம்பர்–1’ வீரராக உருவெடுத்துள்ளார். இதன்மூலம் சாதிக்க வயது ஒரு பொருட்டல்ல என்பது தெரிகிறது. இவரால் முடிந்தது ஏன் நம்மால் முடியாது என யோசித்தேன். இவரது சுயசரிதையில் கூறியுள்ள விஷயங்கள் எனக்குள் நம்பிக்கையை அதிகரித்தது. தற்போது எனது கவனம் முழுவதும் அடுத்து நடக்கவுள்ள நான்கு நாடுகள் பங்கேற்கும் தொடரில் உள்ளது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பழைய ‘பார்மை’ திரும்ப பெற முயற்சிப்பேன்.

ஒலிம்பிக் வாய்ப்பு

இந்த ஆண்டு நடக்க உள்ள ஆசிய விளையாட்டு மிகவும் முக்கியமானது. இதில் தங்கம் வெல்லும் பட்சத்தில், வரும் 2020ல் நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறலாம். இவ்வாறு ஸ்ரீஜேஷ் கூறினார்.

Advertisement

டெல்லி vs கொல்கத்தா , போட்டி 26
இந்திய பிரீமியர் லீக், 2018
4/27/2018 , 20:00
ஃபெரோஸ் ஷா கோட்லா, டெல்லி

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?