Advertisement


தமிழகம் முதல் தோல்வி

ஜனவரி 12, 2018.
 Comments  
 


Dinesh Karthik
 

விஜயநகரம்: சையது முஸ்தாக் டிராபி ‘டுவென்டி–20’ தொடரில் தமிழக அணி முதல் தோல்வி அடைந்தது. 

மண்டலங்களுக்கு இடையே சையது முஸ்தாக் அலி உள்ளூர் ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. ஆந்திராவின் விஜயநகரத்தில் நடந்த தெற்கு மண்டலத்திற்கான லீக் போட்டியில் தமிழகம், கர்நாடகா அணிகள் மோதின. ‘டாஸ்’ தமிழக அணி ‘பவுலிங்’ தேர்வு செய்தது.

கருண் நாயர் சதம்:

கர்நாடகா அணிக்கு மயாங்க் அகர்வால் (13), கவுதம் (0) சொதப்பினர். முருகன் அஷ்வின் ‘சுழலில்’ சமர்த் (19), மணிஷ் பாண்டே (7) சிக்கினர். அபாரமாக விளையாடிய கருண் நாயர்(111) சதம் கடந்தார். அதிசயராஜ் டேவிட்சன் ‘வேகத்தில்’ ஸ்டூவர்ட் பின்னி (5), சிதம்பரம் கவுதம் (3), மிதுன் (0) சிக்கினர். கர்நாடகா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. தமிழகம் சார்பில் அதிகபட்சமாக அதிசயராஜ் 5 விக்கெட் வீழ்த்தினார்.

பேட்ஸ்மேன்கள் சொதப்பல்:

இத்தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற தமிழக அணி, நேற்று திணறியது. அபினவ் முகுந்த(1),  தினேஷ் கார்த்திக(0), கேப்டன் விஜய் சங்கர்(20) ஏமாற்றினர். வாஷிங்டன் சுந்தர் 34 ரன் எடுத்தார். தமிழக அணி 16.3 ஓவரில் 101 ரன்களுக்கு சுருண்டு, 78 ரன் வித்தியாசத்தில் முதல் தோல்வியை சந்தித்தது. கர்நாடகா சார்பில் அதிகபட்சமாக டுபே 4 விக்கெட் வீழ்த்தினார். 

 

 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?