Advertisement


தங்கம் வென்றார் சரிதா

ஜனவரி 12, 2018.
 Comments  
 


sarita
 

ரோதக்: தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சரிதா தேவி (60 கி.கி.,), சோனியா (57 கி.கி.,), சர்ஜுபாலா தேவி (48 கி.கி.) தங்கம் வென்றனர்.

ஹரியானாவில் உள்ள ரோதக் நகரில், பெண்களுக்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் 60 கி.கி., எடைப்பிரிவு பைனலில், அனைத்து இந்திய போலீஸ் அணியின் சரிதா தேவி, ரயில்வே அணியின் பவித்ராவை வீழ்த்தி, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

பின், 57 கி.கி., எடைப்பிரிவு பைனலில், ரயில்வே அணியின் சோனியா, 5–0 என்ற கணக்கில் ஹரியானாவின் சாக்சி சோப்ராவை தோற்கடித்து தங்கம் வென்றார்.

‘பிளை வெயிட்’ 48 கி.கி., எடைப்பிரிவு பைனலில், மணிப்பூரின் சர்ஜுபாலா தேவி, 3–2 என்ற கணக்கில், ஹரியானாவின் ரித்துவை வீழ்த்தி, தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.

மற்ற எடைப்பிரிவுகளில் அசத்திய மீனா குமாரி (அனைத்து இந்திய போலீஸ், 54 கி.கி.,), ராஜேஷ் நார்வல் (ரயில்வே, ‘லைட் பிளைவெயிட்’ 48 கி.கி.,), பூஜா ராணி (ஹரியானா, 75 கி.கி.,), பூஜா (ரயில்வே, 69 கி.கி.,), சீனா பூனியா (ரயில்வே, 82 கி.கி.,) உள்ளிட்டோரும் தங்கம் வென்றனர்.

இத்தொடரில் 5 தங்கம், 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை அள்ளிய ரயில்வே அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை  கைப்பற்றியது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?