Advertisement


காமன்வெல்த்: சுஷில் குமாருக்கு சிக்கல்

ஜனவரி 12, 2018.
 Comments  
 


Sushil Kumar could miss CWG
 

 புதுடில்லி: வரும் காமன்வெல்த் போட்டியில் மல்யுத்த வீரர் சுஷில் குமார் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில், வரும் ஏப். 4–15ல் காமன்வெல்த் விளையாட்டு நடக்க உள்ளது. இதற்காக டில்லியில் நடந்த மல்யுத்த தகுதிச் சுற்றில் இந்தியாவின் சுஷில் குமார் பங்கேற்றார். இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இவர் அரையிறுதியில்,பர்வீண் ராணாவை வீழ்த்தினார். தொடர்ந்து அசத்திய இவர், காமன்வெல்த் விளையாட்டிற்கும் தகுதி பெற்றார்.

இப்போட்டிக்குப்பின் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் பகுதியில் சுஷில் குமார், ராணா ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில், ராணாவும், அவரது சகோதர் நவீனும் தாக்கப்பட்டனர். நவீன் அளித்த புகாரின் பேரில், டில்லி மத்திய போலீஸ் நிலையத்தில், சுஷில் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. 

இந்த வழக்கில் சுஷில் குமார் மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சுஷில் குமார் தேர்வை திரும்ப பெற்றுக் கொள்ளும் எனத் தெரிகிறது. ஏற்கனவே, கடந்த 2016ல் சக வீரர் நரசிங் யாதவுடன் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக ரியோ ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார் சுஷில் குமார். தற்போது ராணாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, காமன்வெல்த் வாய்ப்பும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?