Advertisement


தமிழகம் ‘ஹாட்ரிக்’ வெற்றி

ஜனவரி 11, 2018.
 Comments  
 


Syed Mushtaq Ali Trophy T20 South Zone, Tamil Nadu, Goa
 

விஜயநகரம்: முஸ்தாக் அலி டிராபி ‘டுவென்டி–20’ லீக் போட்டியில் கோவாவை வீழ்த்திய தமிழக அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது. 

மண்டலங்களுக்கு இடையே சையது முஸ்தாக் அலி உள்ளூர் ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. ஆந்திராவில் உள்ள விஜயநகரத்தில் நடந்த தென் மண்டலத்திற்கான லீக் போட்டியில் தமிழகம், கோவா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தமிழக அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.

கார்த்திக் அசத்தல்: தமிழக அணிக்கு அபினவ் முகுந்த் (12), வாஷிங்டன் சுந்தர் (14) ஏமாற்றினர். விஜய் சங்கரும் (2) ஒற்றை இலக்கில் திரும்பினார். தனி வீரராக அசத்திய தினேஷ் கார்த்திக் (56), இத்தொடரில் ‘ஹாட்ரிக்’ அரை சதம் கடந்தார். கேப்டன் பாபா அபராஜித் 26, சஞ்சய் 28 ரன் எடுத்தனர். முடிவில், தமிழக அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது. ஜெகதீசன் (10) அவுட்டாகாமல் இருந்தார். 

‘சுழல்’ தொல்லை: பின், களமிறங்கிய கோவா அணிக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் தொல்லை தந்தனர். வாஷிங்டன் சுந்தர் ‘சுழலில்’ ஆமோக் தேசாய் (25) ஆட்டமிழந்தார். முருகன் அஷ்வின் வலையில் கீனான் (3), தர்ஷன் (23) சிக்கினர். கேப்டன் சகன் கமாத் (41) மட்டும் ஆறுதல் அளித்தார். முடிவில், கோவா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 130 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது. தமிழகம் சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர், முருகன் அஷ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

முதலிரண்டு போட்டியில் ஆந்திரா, கேரளா அணியை வீழ்த்திய தமிழகம், நேற்று ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. 

கர்நாடகா சர்ச்சை வெற்றி

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடந்த தென் மண்டலத்திற்கான லீக் போட்டியில் கர்நாடகா, ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் விளையாடிய கர்நாடகா அணி 20 ஓவரில் 205/5 ரன் எடுத்தது. பின், களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 203/9 ரன் மட்டும் எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. 

போட்டியின் இரண்டாவது ஓவரில் கர்நாடகா வீரர் அடித்த பந்தை ஐதராபாத் அணியின் மெக்தி ஹசன் தடுக்க முற்பட்டார். அப்போது, பவுண்டரி எல்லைக் கோட்டின் கயிறு மீது காலை வைத்தார். இதை அம்பயர்கள் கவனிக்கவில்லை. ஆனால், கர்நாடகா இன்னிங்ஸ் முடிந்தபின், இதை சுட்டிக்காட்டினார் கேப்டன் வினய். இதனால், அம்பயர் அபிஜித் கர்நாடகாவின் ‘ஸ்கோரில்’ இரண்டு ரன் சேர்த்துக்கொள்ள அனுமதி தந்தார். இதற்கு, ஐதராபாத் அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு ரன் கூடுதலாக சேர்க்கவில்லை எனில், இரு அணிகளும் ஒரே ‘ஸ்கோரை’ (203) எட்டி இருக்கும். இதனால், ‘சூப்பர் ஓவர்’ நடத்த ஐதராபாத் அணியினர் வலியுறுத்தினர். 

இதனால் ஏற்பட்ட தாமதம் காரணமாக, அடுத்து நடந்த கேரளா–ஆந்திரா அணிகளுக்கு இடையிலான போட்டி தலா 13 ஓவராக மாற்றப்பட்டது.

* குஜராத்தின் ராஜ்கோட்டில் நடந்த மேற்கு மண்டலத்திற்கான லீக் போட்டியில் மும்பை அணி (92/3) 7 விக்கெட் வித்தியாசத்தில் மகாராஷ்டிராவை (89) வீழ்த்தியது. 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?