Advertisement


புஜாரா பின்னடைவு * ரபாடா ‘நம்பர்–1’

ஜனவரி 09, 2018.
 Comments  
 


icc test ranking india, pujara, kohli
 

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கோஹ்லி, புஜாராவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. தென் ஆப்ரிக்க பவுலர் ரபாடா ‘நம்பர்–1’ இடத்திற்கு முன்னேறினார்.

ர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், டெஸ்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை (‘ரேங்கிங்’) பட்டியல் வெளியானது. பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில்  தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரு இன்னிங்சையும் சேர்த்து 33 ரன் (5, 28) மட்டும் எடுத்த, இந்திய கேப்டன் கோஹ்லி (880 புள்ளி) ஒரு இடம் பின்தங்கி மூன்றாவது இடம் பிடித்தார். 

சக வீரர் புஜாரா இரண்டு இடம் பின்தங்கி, 5வது இடத்திற்கு தள்ளப்பட்டார். மற்ற இந்திய வீரர்களான தவான் (33வது இடம்), முரளி விஜய் (30), ரோகித் சர்மாவும் (44) பின்தங்கினர். ஆஷஸ் டெஸ்ட் தொடரை இழந்தாலும், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (881) இரண்டு இடம் முன்னேறி இரண்டாவது இடத்தை பிடித்தார். முதலிடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (947) தொடர்கிறார். 

ரபாடா அசத்தல்

பவுலர்களுக்கான தரவரிசையில் தென் ஆப்ரிக்கா வேகப்பந்துவீச்சாளர் ரபாடா (888 புள்ளி) முதல் முறையாக ‘நம்பர்–1’ இடம் பெற்றார். இந்தியாவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில், இவர் மொத்தம் 5 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம், பவுலர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஏழாவது தென் ஆப்ரிக்க வீரர் என்ற பெருமை பெற்றார். 

புவனேஷ்வர் முன்னேற்றம்

‘நம்பர்–1’ இடத்திலிருந்த இங்கிலாந்தின் ஆண்டர்சன் (887) ஒரு இடம் பின்தங்கி இரண்டாவது இடம் பிடித்தார். இந்திய அணிக்கு வில்லனாக அமைந்த தென் ஆப்ரிக்காவின் பிலாண்டர் (‘நம்பர்–6’) 6 இடம் முன்னேறினார். 

இதேபோல, முதல் டெஸ்டில் 6 விக்கெட் சாய்த்த இந்தியாவின் புவனேஷ்வர், 8 இடம் முன்னேறி 22வது இடம் பிடித்தார். இந்திய ‘சுழல்’ வீரர்கள் ஜடேஜா, அஷ்வின், 3, 4வது இடங்களில் நீடிக்கின்றனர்.

மாற்றம் இல்லை

‘ஆல்–ரவுண்டர்’ பட்டியலில் முதல் மூன்று இடங்களில் முறையே வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன், இந்தியாவின் ஜடேஜா, அஷ்வின் நீடிக்கின்றனர். நான்காவது, ஐந்தாவது இடங்களில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், தென் ஆப்ரிக்காவின் பிலாண்டர் தொடர்கின்றனர். இதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. 

அணிகளுக்கான தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் இந்தியா (124 புள்ளி), தென் ஆப்ரிக்கா (111), ஆஸ்திரேலியா (104) அணிகள் உள்ளன. 

‘டாப்–5’ பேட்ஸ்மேன்

ரேங்க் வீரர் புள்ளி

1 ஸ்மித் (ஆஸி.,) 947

2 ரூட் (இங்கிலாந்து) 881

3 கோஹ்லி (இந்தியா) 880

4 வில்லியம்சன் (நியூசி.,) 855

5 புஜாரா (இந்தியா) 848


‘டாப்–5’ பவுலர்

ரேங்க் வீரர் புள்ளி

1 ரபாடா (தென் ஆப்ரிக்கா) 888

2 ஆண்டர்சன் (இங்கிலாந்து) 887

3 ஜடேஜா (இந்தியா) 861

4 அஷ்வின் (இந்தியா) 830

5 ஹேசல்வுட் (ஆஸி.,) 814

 

‘டாப்–3 ஆல்–ரவுண்டர்’

ரேங்க் வீரர் புள்ளி

1 சாகிப் (வங்கதேசம்) 437

2 ஜடேஜா (இந்தியா) 406

3 அஷ்வின் (இந்தியா) 385

 

‘டாப்–10’ அணிகள்

ரேங்க் அணி புள்ளி

1 இந்தியா 124

2 தென் ஆப்ரி., 111

3 ஆஸி., 104

4 நியூசி., 100

5 இங்கிலாந்து 99

6 இலங்கை 94

7 பாக்., 88

8 வெ.இண்டீஸ் 72

9 வங்கதேசம் 72

10 ஜிம்பாப்வே 1

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?