Advertisement


சிந்துவுடன் மாணவர்கள் சந்திப்பு

ஜனவரி 07, 2018.
 Comments  
 


Sindhu, Chennai School Childrens, Badminton
 

சென்னை: பூஸ்ட் நிறுவனம் நடத்திய போட்டி தேர்வில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர், பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் வீராங்கணை, பி.வி.சிந்துவுடன் விளையாடி அசத்தினர்.

சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், பி.பி.எல்., எனும், பிரிமியர் பாட்மின்டன் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு அங்கமாக,  பூஸ்ட் நிறுவனம், விளம்பரம் வாயிலாக, சில கேள்விகளை கேட்டு, பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் வீராங்கணை, பி.வி.சிந்துவுடன் விளையாட, 6 – 14 வயதுக்கு உட்பட்ட, பள்ளி, மாணவ, மாணவியர்களை தேர்வு செய்தது.

அவர்கள் நேற்று, பெற்றோருடன் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர்.  சிந்துவை பார்த்தும், மாணவ, மாணவியர் உற்சாத்தில் துள்ளி குதித்தனர்.

மதுரையைச் சேர்ந்த, 6ம் வகுப்பு மாணவர், பிரனவ் உள்ளிட்ட சிலர், சிந்துவுடன் அபாரமாக விளையாடினார்.  மாணவ, மாணவியர்கள், மூன்று ஆண்டுகள் மட்டுமே பயிற்சி பெற்றவர்கள் என்பதால், சிந்துவும், அவர்களின் திறமைக்கு ஏற்ப விளையாடினார். அவ்வப்போது விட்டுக்கொடுத்து அவர்களை மகிழ்வித்தார்.

மாணவ, மாணவியர், சிந்துவின் கைகளை பிடித்து, ‘தாங்களும் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல வேண்டும்’ என, விருப்பம் தெரிவித்தனர். அதற்கு, ‘‘படிப்பிலும், விளையாட்டிலும் கடுமையாக உழையுங்கள்; விடா முயற்சி செய்யுங்கள்; கட்டாயம் வெற்றி பெறுவீர்கள்,’’ என, சிந்து, வாழ்த்து தெரிவித்தார்.

பூஸ்ட் நிறுவனம் சார்பில், மாணவ, மாணவியருக்கு, பாட்மின்டன் விளையாடுவதற்கான ராக்கெட்டை வழங்கினார். மாணவ, மாணவியரின் பெற்றோர் கூறுகையில், ‘சாதனையாளர் சிந்துவை துாரத்தில் இருந்தாவது பார்த்துவிட வேண்டும் என, எங்கள் குழந்தைகள் ஆர்வத்துடன் இருந்தனர். 

அவருடன் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என, நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதற்கு ஏற்பாடு செய்த, பூஸ்ட் நிறுவனத்திற்கு நன்றி’ என்றனர்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?