Advertisement


பார்சிலோனா அணியில் பிலிப் கவுட்டினோ: ரூ. 1218 கோடிக்கு ஒப்பந்தம்

ஜனவரி 07, 2018.
 Comments  
 


Philippe Coutinho, Barcelona FC, 160 million euros
 

பார்சிலோனா: லிவர்பூல் கிளப் அணி வீரரான பிலிப் கவுட்டினோவை ரூ. 1218 கோடி கொடுத்து பார்சிலோனா அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 

பிரேசில் கால்பந்து வீரர் பிலிப் கவுட்டினோ, 25. மத்திய கள வீரரான இவர், 2013 முதல் இங்கிலாந்தின் லிவர்பூல் கிளப் அணிக்காக விளையாடி வந்தார். இதுவரை, 152 போட்டியில் 41 கோல் அடித்துள்ளார். கடந்த 2014–15, 16–17ம் ‘சீசனில்’ லிவர்பூல் அணியின் சிறந்த வீரராக தேர்வானார். இந்நிலையில், பார்சிலோனா அணி கவுட்டினோவை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக, ரூ. 1218 கோடியை லிவர்பூல் அணிக்காக வழங்க உள்ளது. இது, கால்பந்து அரங்கில் வீரர் ஒருவருக்கு செலவழிக்கப்படும் மூன்றாவது அதிகபட்ச தொகை. 

நெய்மர்தான் ‘டாப்’: இதற்கு முன், பிரேசில் வீரர் நெய்மர் பார்சிலோனா அணியிலிருந்து ரூ. 1673 கோடிக்கு பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.,) அணிக்காக ஒப்பந்தம் ஆனார். இரண்டாவது இடத்தில் ரூ. 913 கோடிக்கு மொனாகோ அணியிலிருந்து பி.எஸ்.ஜி., அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட பிரான்சின் கெய்லின் மொபாபே வகிக்கிறார். விரைவில் பார்சிலோனாவில் இணைய உள்ள கவுன்டினோ, சுமார் 6 ஆண்டுகள் பார்சிலோனாவுக்காக விளையாட உள்ளார். 

லிவர்பூல் அணியின் இணையதளத்தில் வெளியான அறிக்கையில்,‘ எங்கள் அணிக்காக கவுட்டினோ சிறப்பாக செயல்பட்டார். பார்சிலோனா அணியில் இணைந்துவிட்டதால், லிவர்பூல் அணியிலிருந்து விடை பெறுகிறார்,’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?