Advertisement


மும்பையை வென்றது பரோடா

ஜனவரி 07, 2018.
 Comments  
 


West Zone T20 Cricket League, Baroda, Mumbai
 

ராஜ்கோட்: மண்டலங்களுக்கு இடையிலான ‘டுவென்டி–20’ லீக் போட்டியில், பரோடா அணி, 13 ரன் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

மண்டலங்களுக்கு இடையிலான உள்ளூர் ‘டுவென்டி–20’ லீக் தொடர், நேற்று துவங்கியது. இதில் ராஜ்கோட்டில் நடந்த மேற்கு மண்டல அணிகளுக்கான லீக் போட்டியில், மும்பை, பரோடா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ செய்த பரோடா அணிக்கு ஊர்வில் படேல் (50), கேப்டன் தீபக் ஹூடா (66), குர்ணால் பாண்ட்யா (44*) கைகொடுத்தனர். பரோடா அணி, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது.

கடின இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு சித்தேஷ் லத் (82) நம்பிக்கை தந்தார். கேப்டன் ஆதித்யா தாரே (0), சூர்யகுமார் யாதவ் (22) உள்ளிட்ட மற்ற வீரர்கள் ஏமாற்ற, மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

மகாராஷ்டிரா வெற்றி

ராஜ்கோட்டில் நடந்த மற்றொரு போட்டியில், மகாராஷ்டிரா, குஜராத் அணிகள் மோதின. இதில் முதலில் ‘பேட்டிங்’ செய்த குஜராத் அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய மகாராஷ்டிரா அணிக்கு நிகில் நாயக் (70*) கைகொடுக்க, 19.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?