Advertisement


ஐ.எஸ்.எல்., கால்பந்து: சென்னை அணி ‘டிரா’

ஜனவரி 07, 2018.
 Comments  
 


ISL Football, Chennai, Delhi, Jeje
 

சென்னை: சென்னை, டில்லி அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டி 2–2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. சென்னை சார்பில் ஜீஜே இரண்டு கோல் அடித்து அசத்தினார்.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 4வது சீசன் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று, சென்னையில் நடந்த லீக் போட்டியில், சென்னை, டில்லி அணிகள் மோதின. ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் நந்தகுமார் சேகர், துாக்கி அடித்த பந்தை டில்லி அணியின் டேவிட் தலையால் முட்டி முதல் கோல் அடித்தார். இதற்கு, 42வது நிமிடத்தில் சென்னை அணியின் ஜீஜே, பதிலடி தந்தார். இவர், ரெனே மிஹெலிக் துாக்கி அடித்த பந்தை தலையால் முட்டி கோலடித்தார். பின், 44வது நிமிடத்தில் டில்லி அணியினரின் கோலடிக்கும் முயற்சி, இரண்டு முறை தடுக்கப்பட்டது. இதனையடுத்து முதல் பாதி முடிவில், போட்டி 1–1 என சமநிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய ஜீஜே, 51வது நிமிடத்தில் ஜெர்மன்பிரீத் சிங் ‘பாஸ்’ செய்த பந்தை கோலாக மாற்ற, உள்ளூர் ரசிகர்கள் ‘ஜேஜே’ என ஆரவாரத்துடன் கோஷம் எழுப்பினர். சென்னை அணி, 2–1 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து போராடிய டில்லி அணிக்கு, ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90+1வது நிமிடம்) குயான் பெர்ணான்டஸ், ஒரு கோலடித்தார். ஆட்ட நேர முடிவில் போட்டி 2–2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

இதன்மூலம் சென்னை அணி, 9 போட்டியில், 5 வெற்றி, 2 ‘டிரா’,  2 தோல்வி என 17 புள்ளிகளுடன், 2வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. டில்லி அணி, 4 புள்ளிகளுடன் 10வது இடத்தில் நீடிக்கிறது.

பிறந்த நாள் பரிசு

நேற்று, 27 வது பிறந்த நாள் கொண்டாடிய சென்னை அணியின் ஜீஜே, 2 கோல் அடித்தார். இது, இவரது பிறந்த நாள் பரிசாக அமைந்தது.

பெங்களூரு அணி வெற்றி

நேற்று பெங்களூருவில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் பெங்களூரு, ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டா அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய பெங்களூரு அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த அணி சார்பில் சுனில் செத்ரி (40வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் பெங்களூரு அணி, 9 போட்டியில் 6 வெற்றி, 3 தோல்வி என 18 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. கோல்கட்டா அணி (9 புள்ளி), 7 வது இடத்தில் நீடிக்கிறது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?