Advertisement


சென்னை அணியில் ‘தல’ தோனி: அஷ்வின், காம்பிருக்கு ‘நோ’

ஜனவரி 04, 2018.
 Comments [1]  
 


IPL Cricket, Chennai, Dhoni, Raina, Ashwin
 

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் 11வது சீசனுக்காக மொத்தம் 18 வீரர்கள் மட்டும் தக்க வைக்கப்பட்டனர். சென்னை அணியில் தோனி, ரெய்னா, ஜடேஜா இடம் பிடித்தனர். அஷ்வின், கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர், கழற்றி விடப்பட்டனர்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி–20’ தொடரின் 11வது சீசன், வரும் ஏப். 7ல் துவங்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் வரும் ஜன. 30 அல்லது பிப். 3ல் நடக்கும் எனத் தெரிகிறது. சூதாட்ட பிரச்னையால் தடை விதிக்கப்பட்ட சென்னை, ராஜஸ்தான் அணிகள், 2 ஆண்டுக்குப் பின் இத்தொடரில் மீண்டும் களமிறங்குகின்றன.

இதற்கு முன் ஒவ்வொரு அணியும், அதிகபட்சம் 3 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி தரப்பட்டது. இதற்கான இறுதி பட்டியல் நேற்று வெளியானது. இதன் படி, சென்னை அணிக்கு கேப்டனாக இருந்த தோனி, மீண்டும் அணிக்கு திரும்பினார். இவருடன் ஐ.பி.எல்., தொடரில் அதிக ரன்கள் எடுத்த ரெய்னா (4,540 ரன்), ஜடேஜா  (70 போட்டி, 55 விக்.,) அணியில் நீடிக்கின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘சுழல்’ வீரர் அஷ்வின், ‘ஆல் ரவுண்டர்’ பிராவோ உள்ளிட்டோர் கழற்றி விடப்பட்டனர்.

காம்பிர் இல்லை: கோல்கட்டா அணிக்கு இரு முறை (2012, 14) கோப்பை வென்று தந்த கேப்டன் காம்பிர், பெங்களூரு அணியின் ‘புயல்’ வேக வீரர் கெய்லுக்கு, ‘கல்தா’ கொடுக்கப்பட்டது. ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா, பாண்ட்யா, பும்ரா தக்கவைக்கப்பட்டனர். இதேபோல, பெங்களூரு அணியில் கேப்டன் கோஹ்லி, டிவிலியர்ஸ், சர்பராஸ் கான் (மும்பை) இடம் பிடித்தனர்.

சம்பளம் எவ்வளவு: மூன்று வீரர்களை தக்க வைத்த அணிகள் ரூ. 15 கோடி, ரூ. 11 கோடி, ரூ. 7 கோடி என்ற அடிப்படையில் சம்பளம் தர வேண்டும். இதன் படி, தோனி, ரோகித், கோஹ்லி உள்ளிட்டோருக்கு ரூ. 15 கோடி சம்பளம் கிடைக்கும்.

இரண்டு வீரர்களை தக்க வைத்த கோல்கட்டா, ஐதராபாத் அணிகள் ரூ. 12.5 கோடி, ரூ. 8.5 கோடி சம்பளம் தரவேண்டும். ராஜஸ்தான், பஞ்சாப் அணி தக்க வைத்த ஸ்மித், அக்சர் படேலுக்கு தலா ரூ. 12.5 கோடி கிடைக்கும்.

18 வீரர்கள்

சென்னை: தோனி, ரெய்னா, ஜடேஜா

மும்பை: ரோகித் சர்மா, பாண்ட்யா, பும்ரா

பெங்களூரு: கோஹ்லி, டிவிலியர்ஸ், சர்பராஸ் கான் (மும்பை)

டில்லி: கிறிஸ் மோரிஸ், ரிஷாப் பன்ட், ஸ்ரேயாஸ் ஐயர் (மும்பை)

கோல்கட்டா: சுனில் நரைன், ஆன்ட்ரூ ரசல்

ஐதராபாத்: வார்னர், புவனேஷ்வர் குமார்

ராஜஸ்தான்: ஸ்டீவ் ஸ்மித்

பஞ்சாப்: அக்சர் படேல்

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Murugesan Thangaiah 2 weeks ago | Report abuse
ஆல் தி best




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?