Advertisement


ஆன்டி முர்ரே விலகல்

ஜனவரி 04, 2018.
 Comments  
 


Andy Murray, Britton Tennis, Australia Open Tennis
 

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே, இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் விலகினார்.

நடப்பு ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் வரும் 15–28 ல் மெல்போர்னில் நடக்கவுள்ளது. இதில் இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால், பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே, 30, விலகினார். இவர், கடைசியாக கடந்த ஆண்டு லண்டனில் நடந்த விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் பங்கேற்றார். தற்போது நடக்கும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில் பங்கேற்பதாக இருந்த இவர், காயம் முழுமையாக குணமடையாத காரணத்தினால் கடைசி நேரத்தில் விலகினார்.

இதேபோல, ஆசிய ‘நம்பர்–1’ வீரரான ஜப்பானின் கெய் நிஷிகோரி, வலது கை மணிக்கட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து விலகினார். இவருக்கு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சின்சினாட்டி ஓபன் தொடரின் போது காயம் ஏற்பட்டது.

ஜோகோவிச் சந்தேகம்: ஆஸ்திரேலிய ஓபனில் 6 முறை கோப்பை வென்றுள்ள முன்னாள் ‘நம்பர்–1’ வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், வலது முழங்கை காயம் காரணமாக, அபுதாபி மற்றும் கத்தார் ஓபன் தொடர்களில் பங்கேற்கவில்லை. இதனால் இவர், ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?