Advertisement


ஐ.எஸ்.எல்.,: கோல்கட்டா–கோவா ‘டிரா’

ஜனவரி 04, 2018.
 Comments  
 


ISL Football, Kolkata, Goa, Kerala, Pune
 

கோல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில், கோவா, கோல்கட்டா அணிகள் மோதிய லீக் போட்டி 1–1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 4வது சீசன் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில், ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டா, கோவா அணிகள் மோதின. கோவா அணியினர் பயணம் செய்த விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக கோல்கட்டா வந்தடைந்தது. இதனையடுத்து இரவு 8 மணிக்கு துவங்க வேண்டிய போட்டி, இரவு 10:45 மணிக்கு ஆரம்பமானது.

ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் கோல்கட்டா அணிக்கு கிடைத்த ‘பிரீகிக்’ வாய்ப்பில் ரியான் டெய்லர் துாக்கி அடித்த பந்தை கேப்டன் ராபி கீன், தலையால் முட்டி முதல் கோல் அடித்தார். இதற்கு 24வது நிமிடத்தில் கோவா அணியின் கோரோ, ஒரு கோலடித்து பதிலடி தந்தார். முதல் பாதி முடிவு போட்டி 1–1 என சமநிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் இரு அணியினரும் கூடுதலாக ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனையடுத்து ஆட்டநேர முடிவில் போட்டி 1–1 என ‘டிரா’ ஆனது.

கேரளா–புனே ‘டிரா’

கேரள மாநிலம் கொச்சியில் நடந்த லீக் போட்டியில், கேரளா, புனே அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1–1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. புனே அணி சார்பில் மார்சிலோ பெரைரா (33வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். கேரளா அணிக்கு மார்க் சிப்னியாஸ் (73வது நிமிடம்) கைகொடுத்தார்.

இதனையடுத்து புனே அணி, 9 போட்டியில் 5 வெற்றி, ஒரு ‘டிரா’, 3 தோல்வி என 16 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. அடுத்த இரண்டு இடங்களில் சென்னை (16 புள்ளி), பெங்களூரு (15) அணிகள் உள்ளன.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?