Advertisement


பேரை கேட்டாலே அதிருதுல்ல!

ஜனவரி 03, 2018.
 Comments [1]  
 


kohli
 

இந்திய கேப்டன் கோஹ்லி, 29, பெயரை கேட்டாலே, பயப்படாத பவுலர்கள் இல்லை; அஞ்சாத அணிகள் இல்லை. சர்வதேச கிரிக்கெட்டில், பல சாதனைகளை படைத்து வரும் இவர், எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். ‘ரன் மிஷின்’ என, செல்லமாக அழைக்கப்படும் இவர், தென் ஆப்ரிக்க மண்ணிலும் முத்திரை பதிக்க காத்திருக்கிறார்.

கடந்த, 2013 வரை, இந்திய அணி என்றாலே, அனைவரது நினைவிற்கு வருவது, சச்சின் மட்டுமே. அவர் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றது முதல், அனைவரது பார்வையையும் தன் பக்கம் இழுத்தார், கோஹ்லி. தனக்கென, தனி ஓர் அடையாளத்தை உருவாக்கி கொண்டார். முன்னாள் கேப்டன் கங்குலியின் ஆக்ரோஷ குணத்துடன், களத்தில் காணப்படும் கோஹ்லி, எதிரணி பவுலர்களை சிதறடிக்கிறார்.டெஸ்ட் கிரிக்கெட்டில், சச்சினின், 4வது இடத்தை நிரப்பப் போவது யார்  என்ற கேள்விக்கு, தன் சதங்களால் பதில் அளித்தார் விராத். இவரது ஒவ்வொரு, ‘ஷாட்’டும் தனி ஸ்டைலை கொண்டிருக்கும்; இவரது, ‘கவர் டிரைவ் ஷாட்’டுக்காக, பல ரசிகர்கள் மைதானத்தில் காத்திருப்பர். தொடர்ச்சியாக, 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி, வரிசையாக, அதிக டெஸ்ட் தொடரை வென்ற கேப்டன்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். 17 மாதங்களில், 6 இரட்டை சதங்கள் அடித்து, சர்வதேச அளவில், டெஸ்ட் கிரிக்கெட்டில், அதிக இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், 6வது இடத்தை பிடித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
saravanan 2 weeks ago | Report abuse
எதுக்கு இந்த வருடம் புல்லா கழுவி கழுவி ஊத்த போறாங்க




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?