Advertisement


சுமித் நாகல் ஏமாற்றம்

ஜனவரி 02, 2018.
 Comments  
 


maharastra open tennis sumit nagal
 

 புனே: மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வியடைந்தார். 

தெற்காசியாவில் ஏ.டி.பி., அந்தஸ்து பெற்று ஒரே தொடராக சென்னை ஓபன் நடந்தது. இந்த ஆண்டு முதல், இத்தொடர் மகாராஷ்ராஷ்டிரா ஓபன் என்ற பெயரில் புனேயில் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் (223வது இடம்), பெலாரசின் இலியா இவாஸ்காவை (230வது இடம்) எதிர் கொண்டார். இருவரும் தகுதிச்சுற்றின் மூலம் பிரதான சுற்றுக்குள் நுழைந்தவர்கள்தான். இருப்பினும், சமீபத்திய பெங்களூரு ஓபன் சாலஞ்சர் தொடரை சுமித் வென்றதால், நம்பிக்கை இருந்தது. இதற்கு எதிர் மாறாக இவர் செயல்பட்டார். முதல் செட்டை 3–6 என இழந்த சுமித், அடுத்த செட்டையும் 3–6 என கோட்டைவிட்டார். ஒரு மணி நேரம் 21 நிமிடம் நடந்த போட்டியில் முடிவில், சுமித் 3–6, 3–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். 

ராம்குமார்– மரின் சிலிச் மோதல்:

மற்றொரு முதல் சுற்றில் அசத்திய தமிழகத்தின் ராம்குமார் ராமநாதன் 7–6, 6–2 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ராபர்டோ கார்பலோசை வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில் ராம்குமார், ‘நம்பர்–6’ வீரரான குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர் கொள்கிறார். இவர், கடந்த விம்பிள்டன் பைனல் வரை முன்னேறிய வீரர் என்பதால் ராம்குமாருக்கு கடும் நெருக்கடி தரலாம். 

இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, விஷ்ணுவர்தன் ஜோடி 6–3, 6–7, 6–10 என்ற செட் கணக்கில் கனடாவின் அடில், பிரிட்டனின் நியல் ஜோடியிடம் வீழ்ந்தது. 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?