Advertisement


விண்ணைத் தொடும் விஜேந்தர்

ஜனவரி 02, 2018.
 Comments  
 


vijender
 

தொழில்ரீதியிலான போட்டியில் கால்பதித்தபோது விஜேந்தர் பல எதிர்ப்புகளை எதிர் கொண்டார். தற்போது, வரிசையாக 10 வெற்றிகளை பெற்று சிகரங்களை தொட்டுள்ளார்.

இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், 32. ‘மிடில் வெயிட்’ பிரிவில் பங்கேற்கும் இவர், அரியானாவை சேர்ந்தவர். 15வது வயதில் தேசிய சாம்பியன்ஷிப்பில் முதல் தங்கத்தை முத்தமிட்டார். குத்துச்சண்டை ஜாம்பவானான அமெரிக்காவின் முகமது அலி, மைக் டைசனை ‘ரோல் மாடலாக’ எடுத்துக்கொண்டார். 2006ல் சீனாவின் குவாங்சு நகரில் நடந்த ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இவர், 2008ல் உச்சம் தொட்டார். அந்த ஆண்டில் நடந்த பீஜிங் ஒலிம்பிக்கில் ‘மிடில்–வெயிட்’ பிரிவில் வெண்கலம் வென்றார். இதன் மூலம், ஒலிம்பிக் அரங்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரரானார்.

மிகப்பெரிய திருப்பம்:

இப்படி போன இவரின் வாழ்க்கையில், 2015ல் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. இனி தொழில்ரீதியிலான போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்தார். அப்போது, பல எதிர்ப்புகள் எழுந்தன. ‘தேசம் பெரிதா, பணம் பெரிதா’ என்றெல்லாம் விமர்சன கணைகளை எதிர் கொண்டார். இதை கண்டு கலங்காத விஜேந்தர், முதல் தொழில்ரீதியிலான போட்டியில் (2015 அக்.,) பிரிட்டனின் மான்செஸ்டரில் நடந்த போட்டியில் உள்ளூர் வீரரான சோனி ஒயிட்டிங்கை வீழ்த்தினார். இவரின் வெற்றி நடை தொடர, சமீபத்தில் ஜெய்ப்பூரில் கானா வீரர் எர்னாஸ்ட்டை வென்று, தொடர்ந்து 10வது வெற்றியை பதிவு செய்தார். இதுவரை 7 முறை ‘நாக்–அவுட்’ வெற்றி பெற்றார். தற்போது, ஆசிய பசிபிக் மற்றும் ஓரியன்டல் சூப்பர் மிடில்வெயிட் பட்டத்தை வசப்படுத்தி உள்ளார்.

தொழில்ரீதியான போட்டிகளில் பங்கேற்பதால், ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் நாட்டுக்காக விஜேந்தர் பங்கேற்க முடியாது. இருப்பினும் தான் பங்கேற்கும் தொழில்ரீதியான போட்டிகளில் மூவர்ணக்கொடியை காண்பிக்க விஜேந்தர் தவறுவதில்லை. இதனால், இவரது தேசப்பற்றை யாரும் கேள்வி எழுப்ப முடியாது. 

இவரது வழியில் இன்னும் பல இளம் வீரர்கள் தொழில்ரீதியிலான போட்டிகளில் தடம் பதிக்க வாழ்த்துவோம்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?