Advertisement


கூடைப்பந்து: பிளடெல்பியா வெற்றி

ஜனவரி 02, 2018.
 Comments  
 


basketball
 

அமெரிக்காவில் தேசிய கூடைப்பந்து போட்டித் தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் பிளடெல்பியா அணி, நியூயார்க் நிக்ஸ் அணியை சந்தித்தது. முதல்பாதி முடிவில் 50–48 என, முன்னிலை வகித்தது பிளடெல்பியா அணி. முடிவில், 105–98 என்ற கணக்கில் இந்த அணி வெற்றி பெற்றது.

கால்பந்து: குவைத் ‘டிரா’

குவைத்தில் வளைகுடா நாடுகளுக்கான 23வது கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்த குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது. இருப்பினும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி (மொத்தம் 5 புள்ளி), அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

ஐஸ் ஹாக்கி: நியூஜெர்சி கலக்கல்

தேசிய ஐஸ் ஹாக்கி (என்.எச்.எல்.,) தொடர் அமெரிக்காவில் நடக்கிறது. நியூஜெர்சியில் நடந்த லீக் போட்டியில் டெட்ராய்ட் ரெட் விங்ஸ், நியூஜெர்சி அணிகள் மோதின. இதில் 3–1 என்ற கோல் கணக்கில் நியூஜெர்சி அணி வெற்றி பெற்றது.

ரக்பி: ஏஜன் அணி அபாரம்

பிரான்சில் ‘டாப்–14’ ரக்பி போட்டித் தொடர் நடக்கிறது. இதன் 12வது சுற்று போட்டியில் ஏஜன், சி.ஏ.பிரைவ் அணிகள் மோதின. இதில் 27–13 என்ற கணக்கில் ஏஜன் அணி வெற்றி பெற்றது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் மான்ட்பெல்லர் (42 புள்ளி), ராச்செல்லே (39), கேஸ்ட்ரஸ் (38) அணிகள் முதல் 3 இடத்தில் உள்ளன.

அமெரிக்காவில் பிரின்ஸ்டிரிப் பவுல் கோப்பைக்கான ‘புட்பால் பவுல்’ தொடர் நடந்தது. இதன் பைனலில் லோவா ஹாக்கேஸ், பாஸ்டன் காலேஸ் ஈகிள்ஸ் அணிகள் மோதின. இதில் 27–20 என்ற கணக்கில் ஹாக்கேஸ் அணி வெற்றி பெற்று, கோப்பை கைப்பற்றியது.

பனிச்சறுக்கு: ஷிப்ரின் முதலிடம்

உலக கோப்பை பனிச்சறுக்கு போட்டிகள் தற்போது நடக்கிறது.ஆஸ்திரியாவின் லைய்ன்ஸ் பகுதியில் நடந்த போட்டியில்,அமெரிக்காவின் மிக்கேலா ஷிப்ரின், முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.கடந்த வாரம் அசத்திய இவர், இந்த சீசனில் கைப்பற்றிய நான்காவது கோப்பை இது. சுவிட்சர்லாந்தின் ஹோல்டுனர், சுவீடனின் பிரிதாவெள்ளி மற்றும் வெண்கல பதக்கம்பெற்றனர்.

‘புட்சால்’: ஹம்மார்பி தோல்வி

சுவீடனில் ‘புட்சாலிகன்’, ஐவர் கால்பந்து தொடர் (‘புட்சால்) நடக்கிறது. இதன் வடக்கு பிரிவு லீக் போட்டியில் ஹம்மார்பி, நகா அணிகள் மோதின. இதில், ஹம்மார்பி அணி, 1–2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. இதுவரை நடந்த போட்டிகளில், புள்ளிப்பட்டியலில் ஆர்புரோ (24), நகா (15) அணிகள் முதல் இரு இடத்தில் உள்ளன.

பேஸ்பால்: சிட்னி அசத்தல்

ஆஸ்திரேலியாவில் பேஸ்பால் லீக் தொடர் நடக்கிறது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் லீக் போட்டியில் சிட்னி அணி, 9–5 என்ற கணக்கில் மெல்போர்ன் அணியை வீழ்த்தியது. 19 போட்டியில் 9ல் வென்ற சிட்னி அணி, 4வது இடத்தில் உள்ளது. 8ல் வென்ற மெல்போர்ன் (19 போட்டி), 5வது இடத்தில் உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?