Advertisement


கேப்டன் கோஹ்லி ‘ஜாலி’ * ஷிகர் தவானுடன் நடனம்

ஜனவரி 01, 2018.
 Comments  
 


kohli, Anushka, Shopping, Cape town, Shikhar dhawan dancing
 

 கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவில் இந்திய அணி கேப்டன் கோஹ்லி, ஷிகர் தவான் இணைந்து, அங்குள்ள தெருவில் நடனம் ஆடினர்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 5ம் தேதி கேப்டவுனில் துவங்குகிறது. இதற்கான பயிற்சி போட்டி ரத்து செய்யப்பட்டதால், வீரர்கள் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, கேப்டவுனில் மழை பெய்ய, வீரர்கள் உள்ளரங்கில் பயிற்சியை தொடர்ந்தனர். சமீபத்தில் திருமணம் செய்த கேப்டன் கோஹ்லி, மனைவி அனுஷ்காவுடன் ‘ஷாப்பிங்’ கிளம்பினார். கேப்டவுன் கடைகளில் தள்ளுபடி உள்ளிட்ட பல விவரங்களை கேட்டு, பொருட்கள் வாங்கியதாக தெரிகிறது.

இவருடன் சக வீரர் ஷிகர் தவானும் சென்றார். அப்போது, தெருவில் ஒரு இசைக் குழு பாடல்கள் இசைத்து, புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. இதைப் பார்த்த கோஹ்லி, தவான் இருவரும், தங்கள் பங்கிற்கு நடனம் ஆடத் துவங்கினர். 

ஷிகர் தவான் மகன், தந்தையை ஆட விடாமல் பிடித்து அழைத்துச் சென்றான். இதை அங்குள்ள ரசிகர்கள் பார்த்து ரசித்தனர். இதற்கான போட்டோ, வீடியோ இணையதளத்தில் வெ ளியாகி, ‘வைரல்’ ஆகி வருகிறது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?