Advertisement


டெஸ்ட் தரவரிசை: கோஹ்லி ‘நம்பர்–2’

டிசம்பர் 31, 2017.
 Comments  
 


ICC Test Ranking, Virat Kohli, Cricket
 

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய  கேப்டன் கோஹ்லி, ‘நம்பர்–2’ இடத்தில் நீடிக்கிறார்.

டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 893 புள்ளிகளுடன் 2வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். மற்றொரு இந்திய வீரர் புஜாரா (873 புள்ளி), மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (947 புள்ளி), ‘நம்பர்–1’ இடத்தில் தொடர்கிறார். மெல்போர்ன் டெஸ்டில் இரட்டை சதமடித்த இங்கிலாந்தின் அலெஸ்டர் குக், 17 வது இடத்தில் இருந்து 8 வது இடத்திற்கு முன்னேறினார்.

ஜடேஜா ‘நம்பர்–3’: பவுலர்களுக்கான தரவரிசையில், இந்திய சுழற்பந்துவீச்சாளர்களான ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், முறையே 3, 4வது இடத்தில் உள்ளனர். முதலிரண்டு இடங்களில் முறையே இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (892 புள்ளி), தென் ஆப்ரிக்காவின் ரபாடா (883) உள்ளனர். ஜிம்பாப்வேக்கு எதிரான நான்கு நாள் பகலிரவு டெஸ்டில் பவுலிங்கில் அசத்திய தென் ஆப்ரிக்காவின் மார்னே மார்கல் (10வது இடம்), கேஷவ் மகராஜ் (16வது இடம்) முன்னேற்றம் கண்டனர்.

‘ஆல்–ரவுண்டர்‘களுக்கான தரவரிசையில் முதல் மூன்று இடங்களை முறையே வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் (437 புள்ளி), இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (414), அஷ்வின் (368) தக்கவைத்துக் கொண்டனர்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?