Advertisement


செய்னா, காஷ்யப் வெற்றி

டிசம்பர் 30, 2017.
 Comments  
 


Premier Badminton League, Saina, Kashyap
 

புதுடில்லி: பிரிமியர் பாட்மின்டன் லீக் போட்டியில் அவாதே வாரியர்ஸ் அணியின் காஷ்யப், செய்னா நேவல் வெற்றி பெற்றனர். ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார். அவாதே வாரியர்ஸ் அணி 4–3 என வெற்றி பெற்றது.

இந்தியாவில் பிரிமியர் பாட்மின்டன் லீக் (பி.பி.எல்.,) தொடரின் நான்காவது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று டில்லியில் நடந்த லீக் போட்டியில் செய்னா நேவலின் அவாதே வாரியர்ஸ், வடகிழக்கு வாரியர்ஸ் அணிகள் மோதின.

முதலில் நடந்த கலப்பு இரட்டையர் போட்டியில் அவாதே வாரியர்சின் பெடர்சன், டி.சி.மான் ஜோடி, சாவந்த், ஜங் ஜோடியை 15–14, 15–13 என்ற கணக்கில் வென்றது.

அடுத்து நடந்த ஆண்கள் ஒற்றையர் போட்டியில் அவாதே வாரியர்ஸ் வீரர் காஷ்யப், 15–9, 15–12 என்ற கணக்கில், அஜய் ஜெயராமை வீழ்த்தினார்.

பின், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அவாதே வாரியர்ஸ் அணியின் செய்னா நேவல் 6–15, 15–13, 15–13 என்ற கணக்கில் வடகிழக்கு அணியின் மிசெல்லி லீயை (கனடா) வீழ்த்தினார். அடுத்து நடந்த ஆண்கள் ஒற்றையரில் அவாதே வாரியர்ஸ் அணியின் ஸ்ரீகாந்த் 15–10, 9–15, 6–15 என வடகிழக்கு அணியின் வாங் டிசூ வெய்யிடம் வீழ்ந்தார்.

இதனையடுத்து அவாதே வாரியர்ஸ் அணி 4–3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?