Advertisement


சாதித்து காட்டுமா மூவர் அணி

டிசம்பர் 30, 2017.
 Comments [1]  
 


South Africa Test Cricket Series, India, Virat Kohli, Rahane, Pujara
 

புதுடில்லி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டன் கோஹ்லி, புஜாரா, ரகானே ஜொலிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 5ம் தேதி கேப்டவுனில் துவங்குகிறது. இதுவரை தென் ஆப்ரிக்க மண்ணில் பங்கேற்ற ஆறு டெஸ்ட் தொடர்களில் ஒன்றில் கூட இந்தியா வென்றது இல்லை. மொத்தம் பங்கேற்ற 17 டெஸ்டில், 2ல் தான் வென்றது. 8ல் தோற்ற இந்திய அணி, 7 போட்டிகளை ‘டிரா’ செய்தது. இம்முறை இந்திய அணிக்கு, ‘டாப்–3’ பேட்ஸ்மேன்கள் கைகொடுக்க வேண்டும்.

கடந்த 2008ல் கங்குலி ஓய்வுக்கு பின் லட்சுமண், டிராவிட், சச்சின் என, ‘டாப்–4’ நட்சத்திரங்கள் அடுத்தடுத்து விடைபெற்றனர். இவர்களது இடத்தில் ரெய்னா, புஜாரா, கோஹ்லி, ரகானே, பார்த்திவ் படேல், அபினவ் முகுந்த், கருண் நாயர், ரோகித் சர்மா வந்தனர். 

இதில், புஜாரா, கோஹ்லி, ரகானே ஓரளவுக்கு ‘செட்’ ஆகினர். லட்சுமண், டிராவிட்டுக்குப் பின் புஜாரா, பேட்டிங் ஆர்டரில் 3வது இடத்துக்கு உயர்ந்தார். சச்சினை அடுத்து, நான்காவது இடத்தில் கோஹ்லி வருகிறார். ரகானே ஐந்தாவதாக வருகிறார். 

ரகானே அதிகம்: இந்த மூவரில் குறைவான சதம் (9) அடித்தது ரகானே தான் என்றாலும், அன்னிய மண்ணில் மட்டும் 6 சதம் அடித்துள்ளார். இந்தியாவில் இவரது சராசரி 33 எனில், அன்னிய மண்ணில் 53 ஆக உள்ளது.

அடுத்து கோஹ்லி (மொத்தம் 20 சதம்), அன்னியமண்ணில் 10 சதங்கள் அடித்துள்ளார். கடந்த 2014, இங்கிலாந்து தொடரில், ‘ஸ்டம்சுகளை’ விட்டு விலகிச் செல்லும் பந்துகளில் தொடர்ந்து அவுட்டானார். இந்த பலவீனத்தில் இருந்து இவர் மீண்டு விட்டார் எனத் தெரிகிறது. 

இந்த இருவரில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர் புஜாரா (15 சதம்). களத்தில் நிதானம் மற்றும் பொறுமையாக விளையாடி, ஒருகட்டத்தில் எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்து விடுவார். ஏழு ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், இந்திய துணைக்கண்டத்துக்கு வெளியே பங்கேற்ற 17 டெஸ்டில், ஒரு சதம்(2013ல், தென் ஆப்ரிக்கா) சதம் அடித்துள்ளார்.

‘டிரா’ நம்பிக்கை: தென் ஆப்ரிக்க மண்ணில் ரகானே, சராசரியாக 69 ரன் எடுத்துள்ளார்.  கோஹ்லி(சராசரி 68), புஜாராவும்(சராசரி 44) செயல்பாடும் நம்பிக்கை தருவதாகவே உள்ளது. இந்த மூன்று பேரும் கைகொடுக்கும் பட்சத்தில், போட்டிகளில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், குறைந்தபட்சம் இந்திய அணி ‘டிரா’ செய்யலாம். 

இந்திய வீரர்கள் பயிற்சி

தென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணி பயிற்சி போட்டியில் விளையாட இருந்தது. கடைசி நேரத்தில் இதை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ரத்து செய்தது. இதனால், நேரடியாக ஜன.,5ல் துவங்கும் முதல் டெஸ்டில் களமிறங்குகிறது. 

இதையடுத்து, 29ம் தேதி தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய வீரர்கள் நேற்று தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். கோஹ்லி, புஜாரா, ராகுல் பேட்டிங் பயிற்சியை, ரவி சாஸ்திரி பார்வையிட்டார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
KARTHIK 2 weeks ago | Report abuse
நிச்சயம் வெற்றி




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?