Advertisement


சுஷில்–ராணா ரசிகர்கள் சண்டை: மல்யுத்த களத்தில் பதட்டம்

டிசம்பர் 29, 2017.
 Comments  
 


sushil
 

டில்லி: காமன்வெல்த் விளையாட்டு மல்யுத்த தகுதிச் சுற்று போட்டியின் போது, சுஷில் குமார், பர்வீண் ராணா ரசிகர்களிடையே மோதல் வெடித்தது. அரங்கில் நாற்காலிகள் பறந்தன. ஒருவருக்கு ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில், அடுத்த ஆண்டு (ஏப். 4–15) 21வது காமன்வெல்த் விளையாட்டு நடக்கிறது. இதன் மல்யுத்தப் போட்டிக்கான தகுதிச் சுற்று, டில்லியில் உள்ள இந்திரா உள்ளரங்கு மைதானத்தில் நேற்று துவங்கியது.

சுஷில் தகுதி:

ஆண்களுக்கான ‘பிரீஸ்டைல்’ 74 கி.கி., எடைப்பிரிவு அரையிறுதியில், இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் (2008 ல் வெண்கலம், 2012ல் வெள்ளி) வென்ற சுஷில் குமார், காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் (2013) தங்கம் வென்ற பர்வீண் ராணா மோதினர். விறுவிறுப்பான இப்போட்டியில் சுஷில் குமார் வெற்றி பெற்றார். அடுத்து நடந்த பைனலில் சுஷில் குமார், ஜிதேந்தர் குமாரை தோற்கடித்து, காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்ற தகுதி பெற்றார்.

பனிப் போர்:

கடந்த 2014ல் நடந்த கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்ற சுஷில் குமார், காயம், சக வீரர் நரசிங் யாதவுடன் ஏற்பட்ட சர்ச்சை உள்ளிட்ட பிரச்னைகளால் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு பின் சர்வதேச போட்டிக்கு திரும்பிய இவர், சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் நடந்த காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் பைனலில், பர்வீண் ராணாவை தோற்கடித்து தங்கம் வென்றார். இதேபோல, கடந்த மாதம் இந்துாரில் நடந்த தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பிரவீண் (ஹரியானா, காலிறுதி), சச்சின் ரத்தி (உ.பி., அரையிறுதி), பர்வீண் ராணா (டில்லி, பைனல்) விலக, சுஷில் குமார் தங்கம் வென்றார். இது, சர்ச்சையை கிளப்பியது. இதனால், சுஷில்–ராணா இடையே பனிப் போர் நிலவியது.

ரசிகர்கள் அடிதடி:

இந்நிலையில், அரையிறுதிப் போட்டி முடிந்த பின், வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் பகுதியில் சுஷில் குமார், பர்வீண் ராணா ரசிர்களிடையே முதலில் வார்த்தை மோதல் உண்டானது. பின், அடிதடியாக மாறியது. அப்போது அங்கு வந்த பர்வீண் ராணா மற்றும் அவரது சகோதரர், சுஷில் குமாரின் ரசிகர்களால் தாக்கப்பட்டனர். இதனால் அப்பகுதி கலவர பூமியாக காட்சியளித்தது.

இதுகுறித்து ராணாவின் சகோதரர் கூறுகையில், ‘‘சுஷில் குமாரின் ஆதரவாளர்கள் எங்களை பலமாக தாக்கினர். முகத்தில் குத்து விட்டனர். புரோ மல்யுத்த லீக் தொடரில் பர்வீண் ராணாவை பங்கேற்க அனுமதிக்க மாட்டோம், என, கொலை மிரட்டல் விடுத்தனர்,’’ என்றார்.

நடவடிக்கை உறுதி

இச்சம்பவம் குறித்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் புஷன் சிங் ஷரண் கூறுகையில், ‘‘இச்சம்பவம் எங்கள் முன் நடக்கவில்லை. வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் பகுதியில் நடந்தது. எங்கு நடந்தாலும் இது போன்ற அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட வேண்டியது. டில்லி காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டிருந்தோம். ஆனால் முறையாக வழங்கப்படவில்லை. இதுகுறித்து யாரேனும் (சுஷில் அல்லது ராணா) புகார் தெரிவித்தால், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

பஜ்ரங், சோம்வீர் தகுதி

ஆண்களுக்கான ‘பிரீஸ்டைல்’ 74 கி.கி., எடைப்பிரிவில் சுஷில் குமார் தகுதி பெற்றார். இதேபோல மற்ற ‘பிரீஸ்டைல்’ எடைப்பிரிவு தகுதிச் சுற்றுப் போட்டிகளில் அசத்திய பஜ்ரங் (65 கி.கி.,), சோம்வீர் (86 கி.கி.,), ராகுல் அவேர் (57 கி.கி.,), மவுசம் காட்ரி (97 கி.கி.,), சுமித் (125 கி.கி.,) ஆகியோர் காமன்வெல்த் விளையாட்டுக்கு தகுதி பெற்றனர். தவிர இவர்கள் 6 பேரும் அடுத்த ஆண்டு கிர்கிஸ்தானில் நடக்கவுள்ள சீனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியிலும் விளையாடும் வாய்ப்பை பெற்றனர்.

‘கிரிகோ–ரோமன்’ எடைப்பிரிவில் ராஜேந்தர் (55 கி.கி.,), ஞானேந்தர் (60 கி.கி.,), விக்ரம் (63 கி.கி.,), மணிஷ் (67 கி.கி.,), குல்தீப் மாலிக் (72 கி.கி.,), குர்பிரீத் சிங் (77 கி.கி.,), ஹர்பிரீத் சிங் (82 கி.கி.,), சுனில் (87 கி.கி.,), ஹர்தீப் (97 கி.கி.,), நவீண் (130 கி.கி.,) ஆகியோரும் ஆசிய மல்யுத்த போட்டிக்கு தகுதி பெற்றனர்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?