Advertisement


ரோகித் ரகசியம் தெரியுமா: ரன் மழை பொழிவது எப்படி

டிசம்பர் 28, 2017.
 Comments [2]  
 


Rohit Sharma, India, Cricket, South Africa Test
 

மும்பை: ‘‘ களத்தில் ஆதிக்கம் செலுத்தி, போட்டியை எதிரணியிடம் இருந்து பறித்து விட முயற்சிப்பேன். இது தான் எனது பலம்,’’ என்கிறார் இந்திய அணி வீரர் ரோகித் சர்மா.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஜன. 5ல் கேப்டவுனில் துவங்குகிறது. எவ்வித பயிற்சி போட்டியிலும் பங்கேற்காமல் இந்திய அணி இத்தொடரை எதிர்கொள்கிறது.

இதுகுறித்து இந்திய அணியின் ரோகித் சர்மா கூறியது:

தென் ஆப்ரிக்க தொடர் அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை. இது, இந்திய அணிக்கு மட்டுமல்ல, வேறு எந்த அணி சென்றாலும் அப்படித்தான் இருக்கும். வேகத்துக்கும், பவுன்சருக்கும் ஒத்துழைக்கும் இங்குள்ள ஆடுகளங்களில் ரன்கள் சேர்க்கத் தடுமாறத்தான் செய்வர்.

தற்போது நடக்கும் ஆஷஸ் தொடரில், அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்டில் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்கத் திணறினர். ஒரு சிலர் மட்டுமே தப்பித்தனர். இதுபோன்ற சிக்கலான ஆடுகளம் மற்றும் சூழ்நிலையில் விளையாடி, அந்த சவாலை எதிர்கொள்ள நாங்கள் விரும்புகிறோம். ஒருவேளை இதில் தோல்வி கிடைத்தால், அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம்.

நெருக்கடி தரலாம்

இலங்கை தொடரில் சவாலான ஆடுகளத்தில் விளையாட விரும்பினோம். இதற்கேற்ப, கோல்கட்டா மண்ணில் நடந்த டெஸ்டில், நாங்கள் தேறவில்லை. இருப்பினும், இதில் கற்ற பாடம், தென் ஆப்ரிக்க மண்ணில் சிறப்பாக செயல்பட கைகொடுக்கும் என நம்புகிறோம்.

பொதுவாக, எந்த ஒரு அணியும் சொந்தமண்ணில், எதிரணிகளுக்கு அதிகப்படியான நெருக்கடி தான் தரும். இப்போதைய நிலையில், உலகின் சிறந்த பவுலிங் படை கொண்டது தென் ஆப்ரிக்க அணி. ‘சீனியர்’ ஸ்டைன், ரபாடா, பிலாண்டர் அல்லது மார்கல் என, பல ‘வேகங்கள்’ இந்திய அணிக்கு தொல்லை தரலாம்.

ஸ்டைன் பயமா

இதில் ஸ்டைன், தோள்பட்டை ஆப்பரேஷன் செய்தவர். சுமார் ஒரு ஆண்டுக்குப் பிறகு மீண்டும் வந்துள்ளார். இவர், அனுபவம் வாய்ந்தவர் என்றாலும், முன்பு போல சிறப்பாக செயல்பட முடியுமா எனத் தெரியவில்லை. இதனால், இவர் இந்திய வீரர்களுக்கு தொல்லையாக இருக்க மாட்டார் என நினைக்கிறேன்.

அதேநேரம், இந்திய அணியின் ‘வேகங்களால்’, எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என நம்புகிறேன். ஏனெனில், கடந்த சில ஆண்டுகளாக, நமது பவுலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதனால், தான் இந்திய அணி ‘நம்பர்–1’ இடத்தில் உள்ளது. இம்முறை, தென் ஆப்ரிக்க மண்ணில் இந்தியா சாதிக்கும் என நம்புகிறேன்.

எனது பலம்

என்னைப் பொறுத்தவரையில், களத்தில் ஆதிக்கம் செலுத்தி, போட்டியை எதிரணியிடம் இருந்து பறித்து விட முயற்சிப்பேன். இது தான் எனது பலம். ஒவ்வொரு முறை களத்தில் பேட்டிங் செய்யும் போதும், சூழ்நிலையை முதலில் புரிந்து கொள்வேன். பவுலர்களை நன்கு கணித்து, எப்படி விளாசுவது என, திட்டமிட்டு செயல்படுவேன்.

தென் ஆப்ரிக்க ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இடம் அல்ல. இங்கு, முதல் 20–25 நிமிடங்கள் சவாலானவை. இதை சமாளித்து விட்டால், பிறகு எளிதாக ரன்கள் சேர்க்கலாம்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   1  
sathish 3 weeks ago | Report abuse
முஹம்மது ஆமீரை எதிர்கொள்ள பயிற்சி எடுக்கட்டும் முதலில். சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை அவர்களின் சொந்த மண்ணிலோ அல்லது பொதுவான ஒரு ஆடுகளத்திலோ எதிர்கொண்டு சாதித்துக்காட்ட வேண்டும். அதுதான் திறமை. சச்சின் ஒருவரால் மட்டுமே அது முடியும்.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   2  
பிரதீப் திருக்கோவிலூர் 3 weeks ago | Report abuse
ஆமா இவரு எப்போலாம், கோவம் வருதோ அப்போல்லாம் செம அடி அடிக்கிறாரு,, இ திங்க் ஏன் இங்கிலீஷ்காரன் படத்துல வடிவேலு கிரிக்கெட் காமெடி தான் நினைவுக்கு வருது... இந்த பந்துல பேரு ஏழுதி போட்டு னு சொல்லுவாரு போல...திருக்கோவிலூர்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?