Advertisement


புத்தாண்டில் ‘நம்பர்–1’ இடம்: சிந்துவின் புதிய இலக்கு

டிசம்பர் 28, 2017.
 Comments  
 


Sindhu, Badminton, 2018, Number One Ranking
 

புதுடில்லி: ‘‘புத்தாண்டில் தரவரிசையில் முதலிடத்தை அடைவதுதான் எனது இலக்கு. சிறப்பான செயல்பாட்டின் மூலம் இதை எட்டுவேன்,’’ என, இந்திய பாட்மின்டன் வீராங்கனை சிந்து தெரிவித்தார். 

இந்திய பாட்மின்டன் நட்சத்திரம் சிந்து, 22. ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவர். தற்போது, தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். புத்தாண்டு திட்டம் குறித்து சிந்து கூறியது: 

உலகத் தரவரிசையில் தற்போது மூன்றாவது இடத்தில் நீடிக்கிறேன். புத்தாண்டில் நடக்கும் அடுத்தடுத்த தொரட்களின் செயல்பாட்டை பொறுத்து, தரவரிசையில் முன்னேற்றம் அடைய வாய்ப்புள்ளது. எப்படியும் ‘நம்பர்–1’ இடத்தை எட்ட வேண்டும் என்பதை, எனது இலக்காக வைத்துள்ளேன். 

அதே நேரத்தில், இதையே நினைத்து எனக்கு நானே நெருக்கடி ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. தரவரிசையை நினைத்து துாக்கத்தை இழந்து தவிக்க மாட்டேன். சிறப்பான முறையில் திறமை வெளிப்படுத்தினால், தரவரிசையில் முன்னேற்றம் அடையலாம்.

நீண்ட மோதல்

கடந்த உலக சாம்பியன்ஷிப் பைனலில் ஜப்பானின் நயோமியுடன் மோதினேன். இப்போட்டி சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. இதன்பின், பெண்கள் ஒற்றையர் போட்டியில் விளையாடும் நேரத்தின் அளவும் அதிகரித்துள்ளது. தவிர, சீனா, ஜப்பான் வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவர்களுடன், பங்கேற்கும் போட்டிகள் விரைவில் முடிய வாய்ப்பே இல்லை.

ஆதரவு எப்படி

இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் ரசிகர்களின் ஆதரவு அதிகம் உள்ளது. துபாயிலும் இந்திய ரசிகர்கள் உற்சாகம் அளித்தனர். இதனால், எவ்வித நெருக்கடியையும் உணரவில்லை. எதிர்பார்ப்பு என்பது எப்போதும் இருக்கத்தான் செய்யும். 

ஒவ்வொரு ஆண்டும் ஒரு சில தொடர்கள் இங்கும் அங்கும் என, மாற்றப்படுகின்றன. கூடுதலாக ஒரு சில தொடர்கள் சேர்க்கப்படுகின்றன. இதை நாம் குறையாக சொல்ல முடியாது. தேதி மற்றும் இடங்களை மாற்றுவதால், எவ்வித மாறுபாடும் வந்துவிடப் போவதில்லை.

இவ்வாறு சிந்து கூறினார். 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?